முக்கிய அறிவிப்பு(ப்ளாஷ் நியூஸ், யு நோ)
என்டிடிவியும் நானும்
எங்கக்கா பார்க்க ரதி மாதிரி(அதாவது பாரதிராஜாவோட புதியவார்ப்புகள் ரதி மாதிரி, ஒடனே எங்கக்காவுக்கு பொளந்த வாயா, வயத்துக்குள்ள தினம் எத்தனை ஈ, கொசு குடிபோகும்னெல்லாம் கேக்காதீங்க, ஏன்னா அவங்களும் இப்போ ப்ளாகர்ஆகிட்டாங்க, அவ்வ்வ்வ்வ்...................) ஓடி வந்து என்கிட்டே நின்னு, "ஏய் உனக்குத்தான்டி போன், என்டிடிவியில் இருந்து ஒரு பல்பு டி, வர்ற வியாழக்கிழமை, நம்ம தமிழ்நாட்டோட தேர்தல் ரிசல்ட் பத்தி ஒரு டிஸ்கஷனாம், அதில் பங்கெடுத்துக்க உன்னை செலெக்ட் பண்ணி இருக்காங்களாம்", அப்டின்னு கிழக்கே போகும் ரயில் ராதிகா கணக்கா சிரிக்கறா.
என்னடா இது ஒருத்தருக்கொருத்தர் சூனியம் வெச்சுக்கறளவுக்கு விரோதம் இல்லைனாலும், இப்டியெல்லாம் ஒருத்தர் நலனில் ஒருத்தர் அக்கறை செலுத்துவோம்ங்கற ஆக்டிங்கெல்லாம் நம்ம வீட்ல வொர்கவுட் ஆகாதுன்னு தெரிஞ்சும் தன்னம்பிக்கையோட முயற்சி பண்றாளே, என்னா விஷயமா இருக்கும்னு தீவிரமா, அந்த நம்பிக்கையோட கைய எடுக்க யோசிக்க ஆரம்பிச்சேன்(யப்பா, இதை எழுதறதுக்கு இம்புட்டு கஷ்டமா இருக்கும்னு தெரிஞ்சிருந்தா, என் மூளைய வழக்கம்போல செயல்படவிடாம ஊக்குவிச்சிருப்பேன்) .
என் தொலைநோக்குப் பார்வையை தெளிவா புரிஞ்சிக்கிட்டு, அவளும் விஷயத்துக்கு வந்தா, "நீ, கூட ஒருத்தங்களையும் கூட்டிக்கிட்டு வரணும்னு சொன்னாங்கடி, நானும் வேறவழியில்லாம என் பேரை கொடுத்திட்டேண்டி, பேசின ஆளு ரொம்ப ஸ்ட்ரிக்டா வேற பேசினார்டி" அப்டின்னு அடிச்சு விட்டுக்கிட்டே போறா, சரி தீட்டின கம்பியிலயே கூர் பாக்கிறாப் போலன்னு, ஒரு குரு ஸ்தானத்தில் இருந்து அதில் லயிச்சேன். திருவாளர் பீட்டர் இறுதி முடிவு தெரிஞ்சிக்க நாளை திரும்பவும் என்னைக் கூப்பிடுவதாக சொன்னதாக சொல்லிட்டு, எங்கக்கா நடையக்கட்டிட்டா.
எனக்கோ டென்ஷனாகிடுச்சி, ஏன்னா என்கிட்டே பல குறைகள் இருந்தாலும், எதிராளி என்னை ஜென்ம விரோதியா பாக்குற அளவுக்கு ஒரு குறை உண்டு. அது என்னன்னா, சாதாரணமா எல்லார் கிட்டயும் சகஜமா பழகற நான், இந்த மாதிரி கூட்டம், விவாதம், கலந்துரையாடல்னா இன்னும் ஜாலியாகிடுவேன். இந்தக் கலை எனக்குள்ள எந்த வயசில் துளிர் விட்டுச்சின்னு தெரியல, ஆனா விவரம் தெரிஞ்ச நாள்ல இருந்து போஷாக்கா வளர்ந்துக்கிட்டே இருக்கு.
என்ன பில்டப் ஜாஸ்தியாகிடுச்சா, சரி விஷயத்துக்கு வர்றேன். ஒரு கூட்டத்தில் நான் போய் உக்காந்தாலே, அங்கு நிகழ்ச்சிய நடத்துறவர்ல இருந்து, கலந்துக்கற மத்த மைக் மோகன்கள் வரை எல்லாரையும் வித விதமா கலாய்க்கறது, அவங்க நடந்துக்கறதை வெச்சும், பேசுறதை வெச்சும் அவங்களை டிஆர், பேரரசு, குரோதம் பிரேம் மாதிரியான தமிழ் சினிமாவின் அசைக்க முடியாத தூண்களோட கம்பேர் பண்றது, இல்ல அவங்களோட விவாதம் நடத்தினா எப்படி இருக்கும்னு யோசிக்கறதுன்னு, ஆக்கப்பூர்வமா அறிவ வளப்பேன். இன்னும் அவங்க என்னை மதிக்கறதா தெரிஞ்சா ஒரே கொண்டாட்டம்தான், என்னை ஒருவேளை கேள்விக்கேட்டா, "சீ போ, சொல்ல முடியாது"ன்னோ, "வெவ்வெவ்வே உன் வேலையப் பாத்துக்கிட்டு போ"ன்னோ, இல்லை வேற விதமாக நங்குக் காட்டியோ அவங்களை வெறுப்பேத்தினா எப்படி இருக்கும்னு குஷியா கற்பனைக் குதிரைய தட்டிவிட்டுக்கிட்டு, ஒரு ஸ்மைலிங் பேசோடவே இருப்பேன். இதனால் அந்த நிகழ்ச்சிய நடத்துறவங்க நேர்மாறா புரிஞ்சிக்கிட்டு, என்னையே சுத்தி சுத்தி வருவாங்க.
நான் இப்படி கவலைப்பட்டுக்கிட்டே(எதுக்குன்னா ஒரு வாரத்துக்கு முன்னருந்தே ஒரு பொறுப்பு, பருப்பு பீலுக்கு போக. பின்ன அந்தச் சின்ன விஷயத்துக்காக வாழ்நாள் முழுசும் நாலுபேரை வெறுப்பேத்துற வாய்ப்பை விடுவனா நானு)அடுத்த நாள், நிகழ்ச்சியில் கலந்துக்க சம்மதமும் சொல்லிட்டேன்.
வழக்கம்போல எங்கக்கா முக்கியமான வேலை இருக்கு, அங்க வந்து ஜாயின் பண்ணிக்கறேன்னு சொல்லிட்டு, கடமையே கண்ணா செல்போனை வீட்டில் மறந்து வெச்சிட்டு போயிட்டா. சாந்தோம் தேவாலயப் பின்புறம் படப்பிடிப்பு. என் ராசிப்படி எல்லா விதத்திலும் தாமதமாகி டென்ஷனாகி, சர்ச்சுக்கு போனப்புறமும் எங்கக்காவைத் தேடி முழிச்சி, ஆட்டோவைக் கட் பண்ண சில்லறை இல்லாத பரிதாப நிலையில், ஆட்டோக்காரர் நவீன கர்ணனா மாற(மாற்ற) முயற்சி நடந்துக்கிட்டிருக்கும்போது, எங்கக்காவை பார்த்து, மினி சண்டை போட்டு, பிரச்சினைய சால்வ் பண்ணிக்கிட்டு படப்பிடிப்பு நடக்கிற இடத்துக்கு போய் சேர்ந்தேன்.
அப்போ என்ன நடந்துச்சின்னா..................
டிஸ்கி: நாளைக்கே இதன் தொடர்ச்சியை கண்டிப்பா போட்டிடறேன், இந்தப் பதிவும் எக்கச்சக்க நீளமாகிடுச்சில்லையா:):):)(அவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்................எப்படியெல்லாம் பில்டப் கொடுக்க வேண்டியிருக்கு)
மீ த பர்ஸ்ட்
அப்புறம் இவர்களோட சில பதிவுகளில் இருந்து வவா சங்கம்பத்தி தெரிஞ்சு அங்கே போய் பார்த்தப்போ வெட்டிப்பயல்அவர்களோட பதிவுகள் ரொம்ப கலக்கலா இருந்தது. அவரோட பெரும்பான்மையான பதிவுகள் படிச்சிருக்கேன். சரி, இப்படிப்பட்ட நகைச்சுவை பதிவுகள் வேறெங்காவது மொத்தமா திரட்டுராங்களான்னு வலையில் தேடினப்போதமிழ்மணம்பார்த்தேன். அங்கேப் போய் வெறும் நகைச்சுவைப் பதிவுகளை படிக்க ஆரம்பிச்சேன். முதலில் படிச்சது அபி அப்பாவலைப்பூ.
இவங்க எல்லாருமே ஜாலியா கல கலன்னு எழுதிக்கிட்டு இருந்தாங்க. அப்போதான் அம்பி அண்ணாவோட மெயில் ஐடி இருக்கறது பார்த்தேன். தப்பா எதாவது எழுதிடுவேனோங்கர பயத்தோட என்ன எழுதினேன்னு எனக்கே தெரியாத(அதாவது வழக்கம்போல) ஒரு மெயில் அனுப்பினேன். ஆனா ஒரு பத்து நிமிஷத்திலேயே அவர்கிட்டயிருந்து மெயில். அப்புறம் அவர்கிட்ட கேட்டு டுபுக்கண்ணா, அபி அப்பா ஐடி வாங்கினேன்.
என்னோட சிலப் பதிவுகள் நூறு பின்னூட்டங்களுக்கு மேல வாங்கியிருக்கு, சிலப்பேர் என்கிட்டே, அவ்ளோ பெரிய ஆள், அவருக்கு ஏன் இத்தனை பின்னூட்டம் வரலை, இவ்ளோ நல்ல பதிவு நான் இன்னைக்கு போட்டிருக்கேன், இன்னைக்கு எனக்கு இத்தனை பின்னூட்டம் தான் வந்துச்சின்னு கேட்டிருக்காங்க. அதுக்கு பதில் என்னன்னா, நான் பதிவு போட்டவுடன் செய்ற முதல் வேலை, மேலேக் குறிப்பிட்டுள்ள பதிவர்களுக்கு மட்டுமல்லாது, என் பதிவில் வந்து கலகலப்பான, கிண்டலான பின்னூட்டங்கள் இடும் அத்துனை பதிவர்களின் பதிவுகளுக்கும் சென்று "புதுப் பதிவு போட்டிருக்கேன், நேரம் கிடைக்கும்போது வந்து பாருங்க" என்ற டயலாக்கை போட்டுவிட்டு வருவேன். ஆரம்பத்தில் கொஞ்ச நாள் பின்னூட்டம் வேண்டும் என்ற காரணத்தால் செய்தாலும், பின்னர் அவர்கள் பின்னூட்டம் போடாவிட்டாலும் கூடப் பரவாயில்லை, சும்மா படித்தால் கூட போதும் என்ற அளவிலே இதனை தொடர்ந்தேன். இது என்னோட பழக்கம்.
என் பிறந்தநாள் நெருக்கத்தில், என் பிரெண்ட்ஸ் மட்டும் என்றில்லாமல், எனக்குத் தெரிஞ்ச அனைவருக்கும் எஸ்எம்எஸ் அனுப்பியோ, போன் செய்தோ, மெயில் அனுப்பியோ என்னை வாழ்த்தச் சொல்லி கேட்பேன், என் பெற்றோர்,அக்கா, கணவர் உட்பட எல்லோருக்கும் நினைவூட்டிக் கொண்டே இருப்பேன். இன்னும் கணவர் கிட்ட "என் பிறந்தநாள் வர்றதுக்கு இன்னும் ஒரு மாசம்தான் இருக்கு, எனக்கு இது வேணும், அது வேணும் அப்படி இப்படின்னு, கவுண்ட்டவுன் கொடுத்துக்கிட்டே இருப்பேன்".
பறக்காவெட்டித்தனமாக இருந்தாலும், அது என் இயல்பு. நான் மறந்துபோகும்போது எனக்கு ஒரு மாதிரி கில்டியாக இருக்கும், ப்ளஸ் எனக்கு பலரிடம் இருந்து வாழ்த்துக்கள் பெற ரொம்பப் பிடிக்கும். இதை வைத்து என் பிரெண்ட்ஸ் கலாய்தால் இன்னும் சந்தோஷமாக இருக்கும். வெகு சிலர் இதனை விரும்புவதில்லை, அப்படிப்பட்டவர்களுக்கு நான் தொல்லை கொடுப்பதில்லை.
அதேப் போல நான் 'மீ த பர்ஸ்ட்' போட ஆரம்பித்தது சும்மா ஜாலிக்காகத்தான். யாரையும் புண்படுத்தவேண்டும் என்ற நோக்கில் அல்ல. ஆரம்பத்தில் அப்துல்லாஅண்ணா மற்றும் ச்சின்னப்பையன்பதிவுகளுக்கு மட்டும் போட முயற்சித்து வந்தேன், அதன் பின்னர், நகைச்சுவைப் பதிவுகள் எழுதும் பலரின் பதிவுகளில் போட ஆரம்பித்தேன். பலர் ஜாலியாக எடுத்துக்கொண்டாலும், இது சில சமயங்களில் பதிவர்களின் மனதை காயப்படுத்திவிடுகிறது போன்று தோன்றுகிறது.
நான் எழுதும்போது பேச்சுவழக்கில் எழுதிவிடுகிறேன், அதனால் பலருக்கு வேறொரு அர்த்தத்தில் படலாம். அவர்களுக்காகத்தான் இந்தப் பதிவு. நான் எழுதுவது தவறாக தோன்றும்படி இருக்கலாம், காரணம் நான் என் எழுத்தில் உணர்ச்சிகளை கொட்டி எழுதும் திறன் படைத்தவள் இல்லை. என்னுடைய பதிவுகள் எல்லாமே பேச்சு வழக்கிலே இருக்கும், பின்னூட்டங்களும் அவ்வாறே இருக்கும். என் பின்னூட்டங்கள் மற்றும் அதன் தொனி பிடிக்கவில்லை என்றால், அதனை இக்னோர் செய்திடுங்கள், நான் புரிந்துக்கொண்டு பின்னூட்டம் இடுவதை உங்கள் பதிவுகளில் தவிர்த்துவிடுகிறேன்.
நான் இதனை தேவையில்லா இடைவெளியை குறைத்துக் கொள்ளலாம் என்றுதான் பதிவிடுகிறேன். யாரும் தவறாக எடுத்துக் கொள்ள வேண்டாம்:):):)
டிஸ்கி: நண்பர்களே, உடனே தீபாவளி நாளைக்குங்கற மாதிரி கொண்டாட்டமா ஓட வேண்டாம், அடுத்த பதிவில் இருந்து "புதுப் பதிவு போட்டிருக்கேன், நேரம் கிடைக்கும்போது வந்து பாருங்க" டயலாக் புயலெனக் கிளம்பி வந்து உங்களை தாக்கும். இந்த டயலாக் பார்த்து வந்து தவறாம படிங்க, பட், பின்னூட்டம் போட்டே ஆகனும்னு அவசியமே இல்லை, ஓகே:):):)
கடைசி டிஸ்கி: சமீப காலாமாக கேரெக்டர் ஆர்ட்டிஸ்ட் அவதாரம் எடுத்துள்ள சகலகலா சம்பந்திஅவர்கள் என் பதிவுகளில் நார்மலான பின்னூட்டங்கள் இடுமாறு நிர்வாகத்தால் கேட்டுக்கொள்ளப்படுகிறது:):):)
என்டிடிவியில் என்னை பார்த்தீங்களா?
டிஸ்கி: பதிவு இம்மாம் பெர்சா இருக்கேன்னு வழக்கம்போல கடைசீப் பத்திக்குப் போய், அத வெச்சு ஒப்பேத்தி அட்டெண்டன்ஸ் போடும் அன்பர்களுக்கு, கருப்பனின் காதலி பட பிரிவ்யூ ஷோ டிக்கட் கூரியரில் அனுப்பப்படும் என்பதை பேரானந்தத்துடன் தெரிவித்துக் கொள்கிறேன்.
இதோட முதல் பாகம் இங்கே, ரெண்டாவது பாகம் இங்கே.
அங்கப் போனா விவாதத்துல கலந்துக்கற மாதிரி ஒரு மூஞ்சியும் காணோம். அப்போதான் முழு நம்பிக்கை வந்துச்சி, இங்க நிஜமாவே விவாதம் நடக்கப்போகுது, வந்த போன்கால் எல்லாம் யாரும் எங்களை பல்பு வாங்க வெக்க செஞ்ச சதியில்லைன்னு. ஏன்னா என் பின்னணி அப்படி!!!
சரின்னு, ஒரு பெண்ணாகப் பிறந்தால் திருமணமாகும்வரை ஆற்ற வேண்டிய சிலக் கடமைகள் இருக்கே, அதை செவ்வனே செய்யனும்ங்கற கடமையுணர்ச்சியோட, விகல்பமில்லாம பார்வையை சுழல விட்டால், சவுக்கார்பெட்டே தேவலாம்னு ஆகிடுச்சி. அதென்னமோ சேட்டு பசங்க மட்டும் அசட்டுக்களையை வரமா வாங்கிட்டு வந்தா மாதிரி இருக்கறதோட ரகசியம் என்னன்னே புரியல. சரின்னு இன்னொருப்பக்கம் யதார்த்தமா பார்வையை திருப்பினா, எக்சாம்கு பிரிப்பேர் பண்ற மாதிரி நியூஸ் பேப்பரை வெச்சிக்கிட்டு சிலப் பழம்ஸ் ஆராய்ச்சி பண்ணிக்கிட்டு இருந்தாங்க.
நெக்ஸ்ட் கலர் கலர் வாட் கலர்னு பார்த்தா டோட்டல் டாமேஜ். எக்கச்சக்க மாமிங்க இங்கிலிபீஸ் பேச தெரிஞ்ச ஹோம் மேக்கர்னு ப்ரூவ் பண்ண கெடச்ச சந்தர்ப்பத்த தெளிவா பயன்படுத்திக்க செம சதியோட சங்கமிச்சிருந்தாங்க. என்னடா இது கருத்துப் போலீஸ்களுக்கு வந்த சோதனைன்னு பார்த்தப்போ, ரெண்டு பேர் வந்தாங்க. ரெண்டு பேரும் எம்.ஒ.பி, எங்கள மாதிரியே சேம் பிளட் பீலிங்க்ல இருந்தாங்களாம், அதைச் சொல்லியே அறிமுகப்படுத்திக்கிட்டாங்க. அவங்கக் கிட்ட யாரெல்லாம் (வி.ஐ.பி) வராங்கன்னு கேட்டப்போ, மைத்ரேயன், கனிமொழி, ஒரு பெண் சினிமா டைரெக்டர், இன்னும் ரெண்டு பேர்(ஜாஸ்தி பிரபலமில்லாததால் இப்போ நியாபகம் இல்ல) அப்புறம் நம்ம மல்லுவேட்டி மைனர் கார்த்தி சிதம்பரம்னு சொன்னாங்க.
விஷயத்தை பரப்ப பிரெண்ட்சுக்கு போன் போட்டா, கடமைய எருமை கணக்கா பண்ணிக்கிட்டிருக்காங்க. அதாவது நான் என்டிடிவில வரேன்னதும் செல்லைக்கூட ஆப் பண்ணிட்டு டிவி முன்னாடியே பழியா கெடக்கறாங்களாமா. சீன் போடறதுக்கு சொல்லியா தரணும். சரின்னு பவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்...............ஆகறதுக்குள்ள அடுத்த மேட்டரைக் கேட்டிருவோம்னு, யாரு நிகழ்ச்சிய நடத்தப் போறாங்கன்னு கேட்டேன், ஸ்ரீனிவாசன் ஜெயினாம்னு அவங்க சொல்லிக்கிட்டு இருக்கும்போதே அவரு கார்ல டைரெக்டா விமானநிலையத்தில இருந்து வந்து இறங்கறார். ஆள், தமிழ் பட அமெரிக்க மாப்பிள்ளையாட்டம் இருந்தார். கொஞ்ச நேரத்தில பிரபலங்கள் எல்லாம் வர ஆரம்பிச்சுட்டாங்க, கனிமொழி மேடம் வரலைன்னு தகவல் வந்துச்சி. கார்த்தி ஸார் வரும்போது, 'காரைக்குடி மைனர் பராக் பராக்னு' கத்தனும் போல இருந்துச்சி.
பொதுவாவே யாராவது பிரபலமானவங்க வந்தா, விழுந்தடிச்சு போய் பாக்கறது என்னோட தனித்திறமைகளில் ஒன்னு. ஒருதரம் நான் மினி புராஜெக்ட் ரிப்போர்ட் பிரிண்டவுட் எடுக்கும்போது, அந்தக் கட்டடத்துக்கு எதிர்புறம் அம்மா பிரச்சாரம் பண்ண வராங்கன்னதும், எனக்கு முன்னாடி நின்ன நாலஞ்சு கட ஆளுங்கள எத்திட்டு, பாஞ்சு போய் ஒரு யு டர்ன் அடிச்சு, சுவத்தைப் பிடிச்சி பாலன்ஸ் பண்ணிய ஸ்டைலை பார்த்தப்புறம், அங்க எனக்குக் கெடச்ச மரியாதையே வேற, "மேடம் முதல்ல உங்க பைண்டிங்க முடிச்சுக்கங்க, மேடம் உங்க பிராஜெக்ட் காப்பி எப்படி இருக்குன்னு பாருங்கன்னு" ஒரே அன்புத் தொல்லை.இப்படிப்பட்ட நான் இங்க என்னா செஞ்சிருப்பேன்னு யோசிக்கறீங்களா? ஒன்னும் பண்ணல, யு சி அட் தட் டயம் மீ த மேரியிங் நெக்ஸ்ட் மந்த், சோ நோ அல்பை வேல வெளிப்படையா செஞ்சிங், ஓகே.
பெரிய மனுஷங்கள்லாம் குசலம் விசாரிச்சிக்கிட்டும், ஜாலியா பேசி சிரிச்சிக்கிட்டும் இருக்கும்போதே, நிகழ்ச்சியை நிர்வகிக்கிறவர் வந்தார். 'மாமா பிஸ்கோத்துன்னு' மட்டும்தான் கத்தலை, மத்தபடி அதேமாதிரி தான் எல்லாரும் வரிசைக்கட்டி நின்னோம். வழக்கம்போல இங்கயும் கடசியாத்தான் போய் நின்னேன். அங்கப்போய் பார்த்தா அவர் தன்னை பூச்சாண்டின்னு நம்ப வெக்க படாதபாடு பட்டுக்கிட்டு இருந்தார்.
காலேஜ்ல கான்பரன்ஸ்(எங்களையும் உள்ள விடுற ரேஞ்சுல கூட்டம் இருக்கும்னா பாத்துக்கங்க), மீட்டிங்னு, சிம்போசியத்தைத் தவிர அத்தனைக்கும் எப்டி ஹெச்.ஒ.டி மாமாவ வெச்சு பூச்சு காட்டுவாங்க, அதேமாதிரி அங்கயும் புல்தடுக்கி மாமா, எங்கள எல்லாம் கூப்ட்டு, என்னமோ பிரியாணி பொட்லம் கொடுக்கப்போரா மாதிரி இறுமாப்போட, 'யாரும் மைக்க புடுங்காதீங்க, கருத்த சொல்ல விழுந்தடிச்சு, மிதிபடாதீங்க' அப்டி இப்டின்னு என்னமோ விவாதம் முடிஞ்சப்புறம் எங்க மூஞ்ச ரவுண்டு கட்டி, தாய் மண்ணே வணக்கம் போடப்போறா மாதிரியும், நாங்கெல்லாம் ஒப்பாரி வெக்க மதுரையில ஸ்பெஷல் டிரெயினிங் எடுத்துக்கிட்டு வந்திருக்க மாதிரியும், ஸ்ரீனிவாசன் ஜெயின் வாயப் பொத்தி அழ திருப்பூர்லருந்து டர்க்கி டவல் ஆர்டர் பண்ணி கோட் பாக்கெட்ல சொருகி விட்டா மாதிரியும் ஓவரா பில்டப் கொடுத்தார்.
நம் சமூகத்தின் தலையெழுத்தை நிர்ணயிக்கும் தமிழ்நாட்டின் கருத்துக் காவலர்களான குஷ்பு, ஐயா(ஜயா இல்ல) தமிழ் 'குடி'தாங்கி அண்ட் கோவோட பொன்மொழிகளால் ஏற்பட்ட கலவரச் சூழலில், இம்மாதிரி ஒரு ஆங்கிலத் தொலைகாட்சி நடத்திய விவாதத்துல கலந்துக்கிட்ட ஒரு காலேஜ் பிரெண்டின் வாக்குமூலத்தின் மூலம், இந்த மாதிரி விவாதத்துக்கு அவங்களே ஆள் டிரெயின் பண்ணி கூட்டி வந்து, அவங்களை மட்டுமே பேச விடுவாங்கன்னும், முக்காவாசி நேரம் நம்ம கைகிட்டக் கூட மைக்க கொடுக்க மாட்டாங்கன்னும் கேள்விபட்டிருந்ததால நானும் நிம்மதியா, அந்த மாமாவின் முக அமைப்பை தீவிரமா ஆராய்ச்சி செஞ்சிக்கிட்டு இருந்தேன். ஆனா நிஜ கருத்துப் போலீசான எங்கக்காவை நெனச்சுத்தான் பாவமா இருந்துச்சி.
சரின்னு, அவர் எல்லாரையும் போய் உ , என்ன முழிக்கறீங்க, நிஜமாவே, அவரு இவ்ளோதான் சொன்னாரு, அதுக்குள்ள கேமரா கோணத்தை பாலுமகேந்த்ரா சார் கணக்கா கணிச்சு, அடுச்சி புடுச்சி ஆர்டர் பண்ண ஸ்பெஷல் ஐட்டங்கள் உக்காரதுக்குக் கூட இடம் விடாம, தமிழ் மரபை காக்கும் பொருட்டு, லேடீஸ் தனி, பல்ப்ஸ் தனின்னு லேன்ட் ஆகிட்டு, இன்னும் பார்க் ஆகாம தவிச்சுக்கிட்டிருந்த எங்க நாலு பேரை நக்கலா வேற ஒரு பார்வை பாக்கறாங்க. உடனே, ஐரோப்பாவின் மண்ணையும், அமெரிக்காவின் கழிவையும் அமுதமாகக் கருதும் அந்த புல்தடுக்கி மாமா, நம்ம சென்னையை பத்தி நக்கலா கமெண்டடிச்சுட்டு, எல்லாரும் கலந்துக் கட்டி உக்காருங்கன்னு சொன்னார்.
நான் ரெண்டாவது வரிசை இடது ஓரத்துல இருந்த சீட்டில் உக்கார வெக்கப்பட்டேன். எங்கக்காவ, அவளோட ராசிப்படி பர்ஸ்ட் ரோவில், ஸ்பெஷல் கெஸ்டான மைத்ரேயன் பக்கத்துல உக்கார வெச்சாங்க. விவாதம் ஆரம்பமாச்சு, நானும் வழக்கம்போல கற்பனாஉலகில் சஞ்சரிக்க ஆரம்பிச்சேன். அப்பப்போ மனசு, நம்மள இங்க நொந்திட்டாங்களே, டிவியில நம்மள காமிப்பாங்களா, அப்படின்னு அடிச்சிக்கிட்டே இருந்தது. ஆனாலும் எல்லாந்தெரிஞ்ச மேதாவி ஸ்மைல மட்டும் கொட்டோ கொட்டுன்னு தேளவிட ஜாஸ்தியா கொட்டிக்கிட்டு இருந்தேன். கீழ எங்கக்காவும், அவ பக்கத்துல உக்காத்திருந்த ஒரு பொண்ணும் தரையில் விடப்பட்ட மீனாட்டம் துடிச்சிக்கிட்டு இருந்தாங்க, அதாவது அவங்க கைல மைக்கக் கொடுக்கனுமாம். அதுக்குள்ள ஒரு சின்ன பிரேக் விட்டாங்க. ஒடனே நெறயப் பேர் தப தபதபன்னு கீழ ஓடினாங்க, என்னவாம்னா, ஸ்ரீனிவாசன் ஜெயின்கிட்ட அந்த ரெண்டு மூணு நிமிஷத்துல கலந்தாலோசிச்சி, அடுத்த பிரணாய் ராய் ஆகோனும்னு ஆலோசிக்கராங்களாமா.
நான் நம்ம உடன்பிறப்பு எங்கன்னு பார்த்தா, அப்பவும் தொடர்ந்து பக்கத்துல இருந்த பொண்ணுகிட்ட ஏதோ தீவிர டிஸ்கஷன்ல இருந்தா, அடிப்பாவிகளா நீங்கல்லாம் எப்போதான் அறியாமை இருளிலிருந்து ஜெனெரேட்டர் வெளிச்சத்துக்கு வருவீங்கன்னு சிரிச்சிக்கிட்டேன். நாம எப்பவுமே ஒரு சின்ன ஸ்மைல் கொடுக்கறோம்னாலே நாலு நிமிஷத்துக்கு கொறையாம இருக்கும், சிரிச்சோம்னா எவ்வளவு நேரம் தாங்கும்னு நீங்களே யோசிங்க(இவ்ளோ பெரிய பதிவையே படிக்கறீங்க, இதச் செய்ய மாட்டீங்களா). சோ, அதுக்குள்ள பிரேக் முடிஞ்சு நிகழ்ச்சி தொடர ஆரம்பிச்சிது. அந்த பிரேக் முடிஞ்சு ஆரம்பிச்சப்போ என் சிரிச்ச மூஞ்சுக்கு ஒரு டைட் க்ளோசப் வேற வெச்சாங்களாம்(அப்போன்னு டிவி பார்த்து ஜன்னி கண்ட குழந்தைகளின் தாய்மார்கள் கொடுத்த கண்ணீர் பேட்டியிலிருந்து தெரிஞ்சுக்கிட்டேன்)
மறுபடியும் நிகழ்ச்சி தொடர ஆரம்பிச்ச ரெண்டு நிமிசத்துக்குள்ள துள்ளித் திரியும் காலம்(மைக்குக்காக) ஆரம்பிச்சுது, நான் பாட்டுக்கு பிசியா, கார்த்தி டை அடிக்கறாரா, விழ ஆரம்பிச்சிருக்க நடுமண்டை சொட்டையை எப்படி எதிர்காலத்துல மறைப்பார்ங்கற முக்கிய பிரச்சினை சம்பந்தமா தீவிரமா யோசனை பண்ணிக்கிட்டு இருக்கும்போது, யாரோ என்னை இடிக்கிறா மாதிரி இருந்துச்சி, யாருடா அது, கேமரா முன்னாலயே வேலையக் காமிக்கர ஆள்னு, புதுமைப்பெண் படத்துல, 'ஒரு தென்றல் புயலாகி வருமோன்னு', ரேவதி சூப்பரா காமடி பண்ணுவாங்களே, அப்படி பாக்கறேன், இடிச்சது மைக். எனக்கு ஒரு நிமிஷம் புரியவே இல்ல(டிவியில ஒரு முழு நிமிஷம்னா யோசிச்சுக்கங்க), ஏன் என்கிட்டப் போய் இதை கொடுக்கறாங்கன்னு. அப்புறம் சுதாகரிச்சு, புடிங்கி பின்னால கொடுக்கறதுக்குள்ள கொஞ்சம் பதட்டமே ஆகிடுச்சுன்னா பாருங்களேன். 'டோமர் பாய், என்கிட்டே என்ன வெள்ளாட்டு சின்னப்புள்ளத் தனமான்னு' நிமிர்ந்து பார்த்தா, ஸ்ரீனிவாசன் ஜெயின் முறைக்கறார். அதுக்குள்ள அடுத்த பிரேக். எல்லாரும் என்னைய திரும்பி திரும்பி பாத்துக்கிட்டு குசுகுசுன்னு பேச்சு வேற. அப்பவும் எங்கக்கா வளரும் நாடுகளின் விவசாயப் பிரச்சினைய டிஸ்கஸ் பண்ற மாதிரியே சீன் போட்டுக்கிட்டு இருந்தா. சரி வளர்த்த கடாவோட அம்மாதானேன்னு விட்டுட்டேன்(எங்கக்கா பையனை நானும் வளர்த்தேனாக்கும்) .
திரும்ப விவாதம் ஆரம்பிச்சது, எல்லா வி.ஐ.பி பனியன் வேஷ்டிகளும், சுடிதார், புடவைகளும் பேசி முடிச்சாச்சி. மறுக்கா சாதா ஆளுங்கக் கைல மைக் வந்துச்சி, ஒரு மாமி மூணாவது வரிசையில மைக்குக்காக அந்த குதி குதிக்கறாங்க, கீழே டைரெக்டரம்மா சாமியாடாத குறைதான். எங்கக்கா, அவ பக்கத்துல இருக்கிற எம்.ஒ.பி பொண்ணு இப்டி மைக்குக்காக அங்க ஒரு ஜனத்திரளே அல்லோலகல்லோலப் பட்டுக்கிட்டு இருக்குது, ஆனா பாருங்க, எல்லாரையும் விட்டுட்டு, என்னமோ பூர்வ ஜென்ம பந்தம் மாதிரி, என்கிட்டயே மைக் வந்துச்சி. 'யோவ் நீங்கல்லாம் என்னத்தப் பத்தி இப்போ பேசிக்கிட்டு இருகீங்கன்னே எனக்கு தெரியாது, என்னைய ஏன்யா ரப்ச்சர் பண்றீங்கன்னு' கத்தனும்போல இருந்தாலும், அங்க இருந்தவங்க பார்வையெல்லாம் சரியில்லாததால கம்முன்னு அதை பாஸ் பண்ணிட்டேன். அப்போ மட்டும் எனக்கு அந்த பிரெண்ட் கைல கெடச்சிருந்தா உயிரைக்கொடுத்தாவது, விஜயகாந்த் படத்துல கதாநாயகி வேஷம் வாங்கிக் கொடுத்திருப்பேன்.
ஒரு வழியா நிகழ்ச்சி முடிஞ்சது, இந்த பின்னங்கால் பிடரியில் பட ஓடறதும்பாங்களே, அப்படில்லாம் நான் எப்பவுமே செய்ய மாட்டேன். இப்போ என்னாச்சு, வீரத் திருமகளின் சரித்திரத்தில் மற்றுமொரு விழுப்புண், அப்படின்னு தொடச்சி விட்டுட்டு எங்கக்காவோட வீட்டுக்கு வந்துட்டேன். போறவழியெல்லாம் ஒரே விசாரிப்பு, பொதுமக்கள் கிட்டருந்து இல்ல, பிரெண்ட்ஸ்கிட்ட இருந்து. சும்மா சொல்லக்கூடாது, நல்லா வகதொக இல்லாம காரி காரி துப்புறாங்க. இந்த வீணாப்போன கேமராமேன நான் என்னவோ பயங்கரமா மயக்கி எக்கச்சக்க க்ளோசப் ஷாட்ஸ் வாங்கிட்டேன்னேல்லாம், 'சேர்த்து வெச்சி அபாண்டமா பேசுவது எப்படிங்கற' புக்குக்கு, வாயாலேயே விளக்க உரை எழுதுனாங்க. அப்போ புரோகிராம் பாக்காத, ரெண்டு மூணு குரங்குங்கக் கூட விஷயத்தை கேள்விப்பட்டு, சந்துல சிந்து பாடுதுங்க(அதை எப்டி கண்டுபுடிச்சேன்னா, நான் போட்டுக்கிட்டு போன சல்வார் கமீஸ் மஞ்சள்&ஒயிட் காம்பினேஷன், இதுங்க என்னோட பேவரிட் காம்பிநேஷனான எங்கக் கட்சிக் கொடி காம்பினேஷன்ல தான் போட்டுக்கிட்டு போயிருப்பேன்னு நெனச்சு, ரியலிஸ்டிக்கா இருக்கணும்னு, டிரஸ்ஸப் பத்தி உளறி மாட்டிக்கிட்டாங்க, நாம யாரு, ஜெய்சங்கர் படமாப் பார்த்து வளர்ந்த ரிவால்வர் ரீட்டாவாச்சே)
வீட்டுக்குப் போனா, என்னமோ நான் பிக்பாக்கெட் அடிச்சி மாட்டிக்கிட்டா மாதிரியும், அதப்பத்தி பேசி எம்பாரஸ் பண்ண விரும்பாதவங்க மாதிரியும் திரிஞ்சாங்க. சரின்னு சமாதானப்படுத்தி திட்டச்சொன்னா, முதல்ல கொஞ்சம் சுமார்தான்னாலும், அப்புறம் பிக்கப் ஆகிடுச்சி, நானும் ஸ்டார்ட் மீசிக்னு தாலாட்டை ரசிக்க ஆரம்பிச்சேன்.
இதுல என்ன சோகமான விஷயம்னா, இதை மறுஒளிபரப்பு செஞ்ச ரெண்டு தரமும் கரண்ட் மாமா விரும்பி விளையாடும் கரண்ட் கட் மற்றும் கேபிள் மாமா விரும்பி விளையாடும் ஜாலி கட் போன்ற விளையாட்டுகளின் காரணமாக என் முகத்த என்டிடிவியில பாக்கற கொடுப்பனை கூட எனக்கு இல்லாமப் போய்டுச்சி.
சினிமா தொடர்
1 - அ. எந்த வயதில் சினிமா பார்க்க ஆரம்பித்தீர்கள்?
நான் பிறக்கறத்துக்கு முன்ன இருந்தே வீட்ல டிவி இருந்ததால ரொம்ப சின்னக் குழந்தைல இருந்தே சினிமா பாக்க ஆரம்பிச்சிட்டேன். எனக்கு நியாபகம் இருக்கறது, தலைவரோட பராசக்தி படம்தான். அப்போல்லாம் எங்க தெருவில் எங்க வீட்ல மட்டும்தான் டிவி இருந்ததால, நெறயப் பேர் டிவி பார்க்க வருவாங்க. பராசக்திக்காக, பொதுவா வராத சிலப் பேர் கூட வந்திருந்தாங்க. நான், குழந்தையை ஆத்துல போடும் சீனைப் பார்த்து நிஜம்னு நினைச்சு, 'பே'ன்னு கத்தி ஆர்ப்பாட்டம் பண்ணி, படத்தோட முக்கியமான கோர்ட் காட்சியை யாரையும் பாக்க விடாம செஞ்சிட்டேன். இன்னும்கூட சிலப்பேர் அதை நியாபகம் வெச்சிக்கிட்டு என் கஷ்டத்தை குறைப்பாங்க(என்னக் கஷ்டம்னா, நானா ஏதாவது யோசிச்சு கடுப்பேத்துறத்துக்குள்ள தானே கடுப்பாகிடுவாங்க)
1 - ஆ, நினைவுதெரிந்து கண்ட முதல் சினிமா?
தியேட்டர்லன்னு வெச்சுக்கலாம். கணபதிராம் தியேட்டர்னு அடையார்ல ஒரு சரித்திரப் புகழ்வாய்ந்த தியேட்டர் இருக்கு இல்லையா, அங்கதான் ராஜாதி ராஜா பார்த்தேன். எங்க மாமா தாத்தா(அத்தைப் பாட்டி மாதிரி) வீட்டு விசேஷத்துக்கு போகனும்னு, அங்க வர விருப்பமில்லாத கசின்சோட என்னையும் சேர்த்து படத்துக்கு அனுப்பிட்டாங்க(நான் அங்க வந்தா தொந்தரவு கொடுப்பேனாம்!!!) சோகமா போன நான் அப்டியே செம ஜாலியாகிட்டேன். இவ்ளோ பேரோட படம் பாக்கறோம்ங்கற பீலே குஷியாக்கிடுச்சி. கொஞ்ச நாளில திருப்பி நான் தொந்தரவு கொடுத்ததால அபூர்வ சகோதரர்கள் கூட்டிட்டு போனாங்க(அதே தியேட்டர்). அதுல குள்ள கமல் சாரை நிஜமாகவே வேற ஒரு ஆள்னு ரொம்ப நாள் நினைச்சுக்கிட்டு இருந்தேன்:):):) இதுல ஸ்பெஷாலிட்டி என்னன்னா, ரெண்டுமே டபுள் ஆக்ஷன் படங்கள்.
1 - இ. என்ன உணர்ந்தீர்கள்?
வேற என்ன, விசிலடிக்கறதுங்கறது ஒரு தனி கலை. சின்ன வயசுலயே அதை கத்துக்க சரியான குரு கெடைக்கலன்னா இருபத்து நாலு வயசானாலும் தேற முடியாதுங்கற உண்மையைத்தான்.
2. கடைசியாக அரங்கில் அமர்ந்து பார்த்த தமிழ் சினிமா?
பீமா, மாயாஜால் தியேட்டரில் பார்த்தது. இந்த வருஷம் ஆரம்பத்துல (ஜனவரி) இந்தியா வந்திருந்தப்ப நானும் என் ரங்கமணியும் போனோம். அங்க பிரிவோம் சந்திப்போம், பீமா ரிலீசாகி இருந்துச்சி. பிரிவோம் சந்திப்போம்ல குத்துப் பாட்டு இல்லைங்கறதால, என் ரங்கமணி வர மாட்டேன்னுட்டார். சரின்னு பீமா போனோம்.
3. கடைசியாக அரங்கிலன்றிப் பார்த்த தமிழ் சினிமா எது, எங்கே, என்ன உணர்ந்தீர்கள்?
என் பழக்கமே, வீட்ல ஏதாவது ஒரு படம் போட்டு விட்டுட்டு வலையில் சுத்திக்கிட்டு இருக்கறதுதான். இன்னைக்கு கடைசியா கர்ணன் போட்டுட்டு சுத்திக்கிட்டு இருந்தேன். படம் சூப்பர், ஆனா ஏன் தோல்விப்படமா ஆச்சுன்னு சிலக் காரணங்கள் தோனுச்சி. எல்லாருக்கும் ஒரு மினி பூதம் கணக்கா மேக்கப் போட்டு, உடம்பை கொஞ்சம் குறைக்கச் சொல்லாம, கர்ணனை விட அவர் மனைவி புஜபல பராக்கியாமச்சாலியாக தெரியறது, திருவிளையாடல், கந்தன் கருணை மாதிரி ஒரு புளோ இல்லாம, குட்டிக்கதைகளா(நோ கற்பனை ஓட்டம் பிளீஸ்) எடுத்திருக்கறது, முக்கியமா 'ப' வரிசைப் பீல் குட் செண்டிமெண்ட் படங்களுக்கு டிமான்ட் எகிறனப்போ ஹீரோ சாகிறாமாரி காட்னதுன்னு(மகாபாரதம்தான்,ஆனா டைமிங் முக்கியமில்ல சினிமாக்கு) எக்கச்சக்க காரணங்கள் தோனுச்சி. (சரி, நஷ்டத்தை சரிக் கட்ட எடுத்த பலே பாண்டியா எப்டி ஓடுச்சின்னு யாராவது பின்னூட்டத்துல சொல்லுங்களேன்). புதுப்படம்னா, சரோஜா. சூப்பரா இருந்தது. நான் கிட்டத்தட்ட பிரேம்ஜியும் மிர்ச்சி சிவாவும் கலந்தக் கலவை(அதப் பத்தி ஒரு தனிப் பதிவே போடறேன்)
4. மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா
நல்ல தம்பி(என்.எஸ்.கே), பசி, அன்பே சிவம், கண்ட நாள் முதல், மொழி, சென்னை 28, மகளிர் மட்டும், சந்தியா ராகம், முதல் மரியாதை, பாமா விஜயம், நரசிம்மா.
5-அ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா - அரசியல் சம்பவம்?
சம்பவம் நடந்தப்போ நான் பிறக்கலைன்னாலும் லக்ஷ்மிகாந்தன் கொலைவழக்கும், கீழே இருக்குற வழக்கும் இன்னிவரைக்கும் என்னை ரொம்ப அட்ராக்ட் பண்ணிக்கிட்டு இருக்கு.
எம்.ஆர். ராதா சார் எம்.ஜி.ஆரை சுட்டது. அச்சம்பவம் எப்படி, மதுரை முத்து ரேஞ்சில கட்சில இருந்தவரை வேறு தளத்திற்குக் கொண்டுசென்றது, அந்த சமயத்தில் அது எப்படி செம பரபரப்பாக பேசப்பட்டிருக்கும்ங்கற ஒருவித திரில், அதுக்குப் பின்னணியா சொல்லப்படற ரெண்டு முக்கியக் காரணங்கள், சம்பவத்திற்கு அப்புறம் ராதா சார் அடிச்ச கமெண்ட்ஸ், கேஸ்ல வாதாடுனது எங்க நெருங்கின உறவினர், இப்படி பலக் காரணங்கள் உண்டு. இன்னொரு சோகமான விஷயம் இந்த ஒரு சம்பவத்தாலே, அவ்ளோ பெரிய திறமைசாலிக்கு பெரிய அளவுல வெளிப்படையா அரசாங்கம் எந்த மரியாதயுமே செய்ய முடியாமப் போனது.
5-ஆ. உங்களை மிகவும் தாக்கிய தமிழ்ச்சினிமா - தொழில்நுட்ப சம்பவம்?
ரெண்டு அபூர்வ சகோதரர்களும் என்னை ரொம்ப பிரம்மிக்க வெக்கும். (எம்.கே.ராதா நடிச்சது)அந்தக் காலக்கட்டத்துலயே, நமக்கு உறுத்தாம ரெட்டை வேஷத்தை அழகா எடுத்திருப்பாங்க (எல்லாத்தையும் வெச்சுக்கிட்டு ஷங்கர் ஜீன்ஸ் எடுத்து எரிச்சல்படுத்தினாரே:(:(:()புது அபூர்வ சகோதரர்கள் அப்பு கமலும் ரொம்ப ரொம்பப் பிடிக்கும்.
6. தமிழ்ச்சினிமா பற்றி வாசிப்பதுண்டா?
கண்லபடற அத்தனை சினிமா சம்பந்தப்பட்ட நியூசும் வாசிப்பேன். மொதோ மொதோ படிச்சது குமுதம்ல வர்ற லைட்ஸ் ஆன்தான்னு நினைக்கறேன். கிசுகிசு ரொம்பப் பிடிக்கும். நம்ம சினிமா கிசுகிசு மட்டும்தான் கொஞ்சமாவது விடை தெரியும்.
7. தமிழ்ச்சினிமா இசை?
இதைப்பத்தி நான் ஒரு தனிப்பதிவேபோட்டிருக்கேன்.
எங்கம்மா எனக்கு பாடுன தாலாட்டே சினிமாப் பாட்டுங்கதான். ஆனா அப்புறம் ஒரு காலத்துல நான் இல்லாத பியூரிட்டான் வேல செஞ்சுக்கிட்டு இருப்பேன். வெறும் கர்நாட்டிக் மியூசிக் பாடறது, கேக்குறதுன்னு. மினி சைஸ் அவ்வையார் மாதிரி கொடுமைப் பண்ணுவேன். அப்புறம் அது தானா ஒம்போது பத்து வயசானப்போ சரியாகி, இப்போ தமிழ்ல சினிமாப் பாட்டைத்தவிர வேறெதுவும் கேக்குறதில்லை.
என்னைப் பொறுத்தவரை தமிழ் சினிமா இசைக்கு மூணு கோல்டன் பீரியட் இருந்துச்சு. முதல் பீரியட் ஐம்பதுகளின் இறுதியில் இருந்து, அறுபதுகளின் இறுதிவரை ஒரு காலக்கட்டம், எண்பதுகள் முழுசா, இன்னொரு காலக்கட்டம், தொன்னூத்தி ரெண்டுல இருந்து தொன்னூத்தி ஏழுவரைக்கும் அடுத்த காலக் கட்டம். மத்ததெல்லாம் அவ்ளோ பிடிக்காது, காரணம், ஒண்ணு, கதாநாயகன், நாயகி கொடுமயாத் தோன்றும் காலக்கட்டம்(திரிசூலம், உரிமைக்குரல், ஜக்கம்மா ரேஞ்ச் படங்கள்), இன்னொன்னு யார் இசையமைச்சிருக்காங்கன்னு தெரிஞ்சிக்கும் ஆவல் கூட தோணாத மாதிரி ஒரு பீரியட்:(:(:(
8. அ. தமிழ் தவிர வேறு இந்திய, உலக மொழி சினிமா பார்ப்பதுண்டா?
படத்துக்கு நான் மொழியே பாக்கறதில்லை. தெலுங்கு கிருஷ்ணா படங்கள் குழந்தையா இருக்கறச்சே பார்த்தது. அப்புறம் ஷங்கர் நாக் இறந்தப்போ அவர் படம் ரெண்டு மூணு பாத்திருக்கேன். ஹிந்தி படம் நினைவு தெரிஞ்ச நாளில் இருந்து பாக்கறேன். ஞாயிறு மதியம் போடற பெங்காலிப் படங்கள் ஒன்னு ரெண்டு பாத்து கொஞ்சநாள் மிதுன் பிடிச்சிருந்தது. அதே நேரத்தில் போடும் மலையாளப் படங்களைப் பார்த்து வெறுத்துப்போயி இனி மலையாளப் படமே பாக்கைக் கூடாதுன்னு நெனச்சிருந்தேன், அப்புறம் எங்கக்கா பாதிப்புல பாக்க ஆரம்பிச்சு இப்போ நெறைய பாக்கறேன். ஹாலிவுட் படங்கள் பாக்க ஆரம்பிச்சது வில்ஸ்மித் பைத்தியம் புடிச்சு அலஞ்சதால. இப்போ நெறைய பிரெஞ்சுப் படங்கள் பாக்கறேன். பிரெஞ்சு சினிமாக்கள் மிக மிக வித்தியாசமான தளங்களை மிக வித்தியாசமா டீல் செய்வது ரொம்ப நல்லா, பிரஷா இருக்கு.
8. ஆ. அதிகம் தாக்கிய படங்கள்?
தெலுங்குல ஷிவா,பிரேமா, தொலி பிரேமா
மலையாளம்ல இன் ஹரிஹர் நகர், காட்பாதர், akale, பிரியதர்ஷன் சார் படங்கள்.
ஹிந்தில ஜங்க்லீ, shree 420, அனாரி, பாவர்ஜி, பாதோன் பாதோன் மே, பியா கா கர், கட்டா மீட்டா, சாத் சாத், guddi,கபி ஹான் கபி நா, ஹெச்ஏஹெச்கே, டிடிஎல்ஜே.
ஹாலிவுட்லஎனக்கு தெரிஞ்சதெல்லாம் ரொமாண்டிக் காமடி வகைகளும், பாண்டசி வகைகளும் மட்டும்தான், அதால ரொம்ப ரொம்பப் பிடிச்சப் படங்கள் மட்டும் சொல்றேன். Independence Day, Bridget Jones' Diary (ரெண்டு பாகமும்), when harry met sally, monster in law, how to lose a guy in 10 days, what a girl wants, jingle all the way இப்படிப்பட்ட படங்கள்தான்.
பிரெஞ்சுல நான் பார்த்தவரை எனக்குப் பிடிச்சது டேனி பூனின் Bienvenue chez le ch'tis, La Maison du bonheur மற்றும் Louis de Funèsஇன் அனைத்து படங்களும். நெஞ்சைத் தொட்டு மனசை லேசாக்கும் காமடிக்கு முன்னவர் படங்க, லாஜிக் இல்லாமல், சமுதாயத்தில் நடக்கும் அநியாயங்களையும், அவலங்களையும், விநோதங்களையும் வித்தியாசமானக் காமடியோடு கூறுவது பின்னவர் படங்கள்(உதாரணத்திற்குக் கூறவேண்டுமானால் இதேப் போலஇருக்கும்).
9. தமிழ்ச்சினிமா உலகுடன் நேரடித்தொடர்பு உண்டா? என்ன செய்தீர்கள்?
பிடித்ததா? அதை மீண்டும் செய்வீர்களா? தமிழ்ச்சினிமா மேம்பட அது உதவுமா?
நெறயப் பேரை தெரியும்(அவங்களுக்கும் என்னைத் தெரியும்), அப்பாவோட ஸ்டூடண்ட்ஸ் பாதிப்பேர், மீதிப்பேர் நண்பர்களாவோ உறவினர்களாவோ இருக்கறதால, அவங்க எதிர்ல சீன் போட்டு பொழப்பு நடத்தறதே பெரும்பாடு. தெரிஞ்சவங்க எல்லாரும் மிக மிக நல்ல நிலைமையில் இருப்பதால், அவங்களை தொந்தரவு பண்ணாம இருக்கறதே பெரும் சேவைன்னு நினைக்கறேன். நான் உப்புமா கிண்டி ஏதாவது ஆகிடுச்சுன்னா:(:(:(ஆனா ரொம்ப மனசைக் கஷ்டப்படுத்துற ஒரே ஒருத்தர் எங்கப்பாவோட பால்யகால நண்பர் பாடலாசிரியர் சிதம்பரநாதன் அவர்கள்தான்:(:(:(
10. தமிழ்ச்சினிமாவின் எதிர்காலம் பற்றி என்ன நினைக்கிறீர்கள்?
கலக்கலா இருக்கும்னு நினைக்கறேன். காப்பி அடிச்சு எடுத்தாலும் அழகா எடுக்கணும். வெங்கட்பிரபுவ நக்கல் அடிக்கறவங்க குசேலனை நினைச்சுப் பாக்கணும். வெங்கட்பிரபு, அமீர், பூபதி பாண்டியன், ராதா மோகன்னு சூப்பர் ஆளுங்க இருக்காங்க:):):) ரீமேக் மற்றும் ரீமிக்ஸ் மேனியா போச்சுன்னா ரொம்ப நிம்மதியா இருக்கும்.
11. அடுத்த ஓராண்டு தமிழில் சினிமா கிடையாது, மற்றும் சினிமா பற்றிய சமாச்சாரங்கள், செய்திகள் எதுவுமே பத்திரிகைகள், தொலைக்காட்சி, இணையம் உள்ளிட்ட ஊடகங்களில் கிடையாது என்று வைத்துக்கொள்வோம்? உங்களுக்கு எப்படியிருக்கும்? தமிழர்களுக்கு என்ன ஆகும் என்று நினைக்கிறீர்கள்?
மத்த மொழிப்படங்களைப் பார்ப்பேன். சினிமால நான் மொழி பாக்கறதில்லை. அதால பெருசா போரடிக்காது. எக்கச்சக்கமா, சீரியல், ரியாலிட்டி ஷோக்கள் வரும். வழக்கம்போல ஆற்காட்டார் 'தயவிருந்தா', ஏதாவது நாடகம், இசை சம்பந்தமான நிகழ்ச்சிகள், கைவேலைப்பாடுகள், விளையாட்டுகளில் பொழுதுபோக்குவோம். சினிமா அடிக்ஷன் இப்போ பெரும்பான்மையா இருக்கிறா மாதிரி தெரியலை. அப்புறம் நாம இதை ஒரு பெரிய வரலாறா மாத்தி, அடுத்த தலைமுறைக்கிட்ட என்னமோ எமர்ஜென்சி பீரியட் கணக்கா பில்டப் கொடுக்கலாம். எனக்கு வருத்தம்னா, அடிமட்ட மக்கள் சிறிது நேரமாவது ஆனந்தமாக தங்களை மறந்து பொழுதை கழிக்கும் விஷயம் திரைப்படம்(குறிப்பாக திரையரங்குகளில்). திரைப்படத்துறையை நம்பி இருக்கறவங்க மாதிரியே இவங்களும் பாதிப்படைவாங்கன்னு நினைக்கறேன்.
நான் இதைத் தொடர அழைப்பது,
அப்துல்லா அண்ணா.
அம்பி அண்ணா.
மங்களூர் சிவா.
சஞ்சய் .
எஸ்கே .
தருமி அவர்கள்.
இவன்.
YES V CAN:):):)
நான் திராவிட சமூகத்தைச் சேர்ந்தவளாக இருப்பினும், மத நம்பிக்கை இல்லாதவளாக இருப்பினும், இதனையெல்லாம் என் மூளையும் மனதும் உணரும் சந்தர்ப்பம் எனக்கு என் திருமண ஏற்பாடுகள் செய்யும்போதுதான் கிடைத்தது. என் தந்தை வழி சொந்தங்களின் கருத்துக்களுக்கு நான் மதிப்பளிப்பதில்லை எனினும், கீழே குறிப்பிடும் விஷயம் எனக்கு ஆச்சர்யத்தையும், வேதனையையும் அளித்தது. எனக்கு திருமண ஏற்பாடு நடக்கிற தகவல் தெரிஞ்சு என் நெருங்கிய சொந்தக்காரர் தொலைப்பேசினார். அவர்தான் எங்க நெருங்கிய சொந்தங்களில் மிகப் பெரிய கோடீசுவரர், மிக நல்லப் பதவியில் இருந்தவர்(ஆட்சியர் பதவிக்கு இணையான பதவி). பதவி அவரை பண்படுத்தலைன்னாலும், அகம்பாவம் உண்டு. தொடர்ச்சியாக கேணத்தனமா கேள்விக்கேட்டுக்கிட்டு வந்தவர், கடைசியா கேட்ட கேள்விதான் அவ்ளோ மோசமானது. அது என்னன்னா, 'அவர் ஒரு கறுப்பர்(இவ்விடத்தில் அவர் உபயோகப்படுத்தியது ஒரு அன்பார்லிமெண்டரி வார்த்தை) இல்லையே' எனக் கேட்டு என்னமோ இந்த நூற்றாண்டின் புத்திசாலித்தனமானக் கேள்வியக் கேட்டுட்டா மாதிரி சிரிச்சார்.
மேற்கத்திய நாடுகளில் வாழும் இந்தியர்கள் இப்படி இல்லை என நினைக்கிறேன். ஆனால் இந்தியாவில் வாழும் முக்காவாசிப்பேர் இதே மாதிரி யோசிப்பதன் அர்த்தம் புரியவில்லை. நளதமயந்தியில் வரும் மாதவன் மாதிரியான சிந்தனை, நன்றாகப் படித்த நல்ல பொதுஅறிவுச்சார்ந்த துறையில் இருப்பவர்களுக்கும் இருப்பதின் காரணம் எனக்குப் புரியவில்லை.
இன்று ஒபாமா அடைந்திருக்கும் வெற்றியின் மூலம் (என் பார்வையில்) மெதுவாக மறுபடியும் தலைத்தூக்க ஆரம்பித்திருந்த ஒரு சமூகக் கேடு கிள்ளி எறியப்பட ஒரு சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. எழுபதுகளின் இறுதியிலிருந்து ஏற்பட்ட நம்பிக்கையூட்டும் சமூக மாற்றம், இரண்டாயிரத்து ஒன்றில் இருந்து வீழ்ச்சிப்பாதையை நோக்கி செல்ல ஆரம்பித்தது. இது என்ன ஒரு தேசத்து அதிபர் தேர்தல் அனைத்தையும் மாற்றிவிடுமா என்றால், நாம் ஒத்துக்கொண்டாலும் இல்லையானாலும், அமெரிக்காவின் நிலைப்பாடையே பெரும்பான்மையான வளர்ந்த நாடுகளும், வளரும் நாடுகளும் பின்பற்றி வருகின்றன. அங்கு கறுப்பினத்தவரை ஆதரிப்பதுதான் கூல் ஆட்டிட்யூடாக கருத ஆரம்பித்த போதுதான், ஐரோப்ப்பாவிலும் அது பரவியது. பின்னர் அழகாக மலர ஆரம்பித்தது. அதில் பாதி கிணறு தாண்டும்போதுதான் அத்தனையும் குலைந்தது. தன்னை ரேசிஸ்டாக பிரகடனப்படுத்திக்கொள்வதும், மேல் ஷாவனிச ஆதரவாளராகக் காட்டிக்கொள்வதும், அசிங்கமான விஷயம் இல்லை எனும் போக்கு அதிகரித்தது. இன்னும் ஐரோப்பாவில் உள்ள பெரிய நிறுவனங்களில் இதனை வெளிப்படையாகவே செயல்படுத்தத் தொடங்கினர். மதச்சார்பற்ற ஜனநாயக அரசுகளாக விளங்கிய நாடுகள் கூட என்றுமில்லா அதிசயமாக மதத்தலைவருக்கு அரசு வரவேற்பையும் மரியாதையையும் அளித்து தன் சார்புநிலையை வெளிப்படுத்தி அதிர்ச்சி ஏற்படுத்தின.
சரி, இது மட்டுமா? குடியரசுக்கட்சியின் கொள்கைகளை பார்த்தால், அது இந்த நூற்றாண்டைச் சேர்ந்த ஒரு அமெரிக்கக் கட்சியினை சார்ந்ததா என்ற சந்தேகம் வருமளவுக்கு இருக்கின்றன. gay, lesbian ரயிட்சை ஆதரிக்காத காட்டுமிராண்டித்தனம், போருக்கு ஆதரவளிக்கும் நெப்போலியத்தனம், கருக்கலைப்புக்கு எதிரான விநோதப்போக்கு, குழப்பமானக் கல்விக்கொள்கை, மருத்துவக் காப்பீடுக் குறித்த வடிக்கட்டின முட்டாள்தனமான கொள்கை என அதிர்ச்சி மேல் அதிர்ச்சிதான். இங்கு கூறப்பட்டவைகள் சொற்பமெனினும் கிட்டத்தட்ட அனைத்துமே சோகக் காமடி வகையைச் சேர்ந்தவைகளாகவே இருந்தன.
வயதான கௌபாய் ஆக மெக்கெயினை காண்பித்தார்கள் என்றால், துணை ஜனாதிபதி வேட்பாளர் விஷயத்தில் அவர்களின் ஆணியப்போக்கு என்னை எரிச்சல் படுத்தியது. சாரா பாலினை துணை ஜனாதிபதி வேட்பாளராக்கியத்தின் மூலம் அவர்கள் பெண்களை எப்படி மதிப்பிட்டுள்ளார்கள் என்று வெளிச்சமாகிறது. இப்படிப்பட்ட தகுதியே இல்லாத ஒருவர் மட்டும்தான் பெண்களின் சார்பாகக் கிடைத்த ஒரே வேட்பாளரா?
இந்தத் தேர்தலில் வைக்கப்பட்ட வாதங்களில் இரண்டு, ஒபாமா முழுமையாகக் கருப்பினத்தைச் சேர்ந்தவரில்லை, அவர் ஏன் தன்னை கிருஸ்துவராக வெளிப்படுத்திக்கொள்கிறார். ஆனால் பொதுவாக மேற்கத்திய நாடுகளில் எல்லாம், கறுப்பினத்தவரைச் சேர்ந்தவர்களைக் காட்டிலும், இம்மாதிரி கலப்புத் திருமணக் குழந்தைகள் மேலும் இன்னல்களை அனுபவிப்பது நிதர்சனம். அதேப்போல இரண்டாவதிற்கும் இன்றைய அமெரிக்காவின் மோசமான நிலையையேக் காட்டுகிறது. மதச் சார்பின்மை எந்தழகில் இப்பொழுது உள்ளது என்பதின் வெளிப்பாடுதான் அது. நிலைமைமேலும் மோசமாகாமல் இருப்பதற்காகவாவது இந்த வெற்றி முக்கியமானது.
தேர்தல் நடந்த தினம் ஒரு வேலைநாள். தேர்தலுக்காக அரசு விடுமுறை அளிக்கவில்லை என்றே நினைக்கிறேன். மிடில் கிளாஸ் மற்றும் அவர்களுக்கும் மேலே உள்ள சமூகத்திற்கு சரி. ஆனால் தினசரி கூலி அடிப்படையிலும், ஒரு நாள் விடுமுறை எடுத்தால் பாதிக்கப்படும் சூழ்நிலையிலுள்ள ஏழ்மையான மக்களும் சாமான்யர்களும் எவ்வாறு ஓட்டளிப்பார்கள்? இதனால் பாதிக்கப்படும் வேட்பாளர் யார்? கண்டிப்பாக ஒபாமா என்றே நான் நினைக்கிறேன்.
திருமதி மிஷல் ஒபாமா பல்வேறு வகைகளிலும் கவருகிறார். முதலில் அவருடைய நோ நான்சென்ஸ் லுக், தன்னை பெண்குலத்தின் பொன்விளக்கு ரேஞ்சில் வெளிக்காட்டிக்கொள்ளாத்தன்மை. பொதுவாக கணவர் ஜனாதிபதியாகத் தேர்வானவுடன் மேடையில், உலக அழகிப்பட்டம் வென்றவுடன் அந்த அழகிகள் செய்யும் டிராமாவயே இவர்களும் செய்வதை பார்த்து எரிச்சல்வரும். ஆனால் மிஷல் ஒபாமா இதனை கையாண்டவிதம் அவ்ளோ நேர்த்தி. பிஆர் கேர்ள் போல் தன்னை பிரசன்ட் பண்ணாமல் அவ்ளோ கம்பீரமாக தன்னை வெளிப்படுத்திக்கொள்கிறார்.
மீடியாவும், கறுப்பின மக்களும் இன்னபிற சிறுபான்மையினரும், அவர்களின் நிதியும் இந்த வரலாற்று சிறப்புமிக்க வெற்றிக்கு முக்கியத் தூண்கள் எனினும் இந்தத் தேர்தலில் மாணவர்கள் மற்றும் இளையசமுதாயத்தின் பங்களிப்பும் அபாரமானது. அவர்களின் இந்த இமாலய ஆதரவில்லையென்றால் நிலைமை எப்படி இருந்திருக்கும் எனக் கூறமுடியவில்லை.
மிக மிக அசாதாரணமான சூழ்நிலையில் ஜனாதிபதியாகி உள்ள ஒபாமா, சந்திக்க வேண்டிய சவால்கள் எக்கச்சக்கம். இவற்றில் அவர் வெற்றி பெற்றால் ஒரு நல்ல அமெரிக்க ஜனாதிபதியாக ஏற்கப்படுவார். ஆனால் தோல்வியடைந்தால் ஒரு மோசமான கறுப்பின ஜனாதிபதியாகக் கருதப்படுவார். ஆதலால் அனைவரும் அவர் வெற்றியடைய மனதார வாழ்த்துவோம்:):):)
உண்மைத்தமிழன் அவர்களுக்கு போட்டியாக...
எனக்கு நூலகங்கள் சுத்தமா பிடிக்காது. காரணம் அங்கெல்லாம் திருப்பி கொடுக்கணுமே, அப்போதானே அடுத்த புக்கை எடுக்க முடியும். அதேப்போல புது புத்தகங்களும் பிடிக்காது. காசு ஒரு காரணம்னாலும், இது 'ஆகி வந்த புக்குங்கர' பீல் எனக்கு ரொம்பப் பிடிக்கும். ஸ்பென்சர் எதிர்லையும், நுங்கம்பாக்கம் ஸ்டேஷன்ல இறங்கி சூளை சைட்ல போனீங்கன்னா இருக்கிற பழைய புத்தகக்கடக்காரங்கக்கிட்டயும்(இவங்கக் கிட்ட எல்லா புது புக்சும் இருக்கும்) என் போட்டோ காமிச்சீங்கன்னா நம்ம பெருமை புரியும்(இத வெச்சு தாராளமா நக்கல் பண்ணுங்கப்பா:):):)).
புத்தகம் வாசிக்கும் பழக்கம்ங்கறது எனக்கு ரொம்பச் சின்ன வயசுல இருந்தே உண்டு. எங்க வீட்டுக்குப் பக்கத்தில் என்னுடன் விளையாடக் கூடிய வயதில் யாருமில்லையாதலால், இந்தப் பழக்கம் வந்துச்சி. எங்க வீட்டை வீடுன்னு சொல்றதவிட சிறிய சமையலறையும் படுக்கைகளும் கூடிய நூலகம்னு சொல்லலாம். எங்கப்பா அண்ட் அக்கா ரெண்டு பேரும் புத்தகப் பைத்தியம்(நான் சாதா பைத்தியம், ஒகேவா:):):)).
எங்கப்பா தமிழாசிரியர்ங்கரதாலயும், திமுக அனுதாபிங்கரதாலையும் சின்ன வயசுல முக்காவாசி தமிழில்தான் இருக்கும். அப்புறம் எங்கக்கா ரொம்ப நல்ல மாணவிங்கரதால அப்போ இருந்த ஸ்கூல் ஹெச்எம் சிஸ்டர் அவங்களே நெறைய நல்ல ஆங்கில புத்தகங்களை தருவாங்க. சோ, எனக்கு இவங்க ரெண்டு பேரோட புத்தகங்கள் பிரச்சினையே இல்லாமக் கிடைச்சிடும். அப்புறம் எங்க தாத்தா(அம்மாவோட அப்பா) பல ஆங்கில மாத இதழ்களுக்கு சந்தாதாரரா இருந்தார். பல புத்தகங்கள் வந்தாலும் அவற்றில் என்னை ரொம்ப கவர்ந்தது, சோவியத் யூனியன் மேகசின் ஒன்று. அதில் அந்தந்த மாதத்தில் உலகத்தில் நடந்த முக்கியமான சமூக, அறிவியல் நிகழ்வுகள் படங்களோட வரும். அதை நான் தனியா சேமிச்சு வெச்சு, எங்க குடும்ப நண்பர் ஒருத்தங்களோட தீசிஸ்கு கொடுத்திட்டேன்:):):) முன்னல்லாம் யார்வீட்டுக்குப் போனாலும் ரீடர்ஸ் டயஜஸ்ட் தூக்கிட்டு வந்திடுவேன். அதெல்லாம் இப்போக் கூட என்கிட்டே இருக்கு.
நான் நாளிதழ்கள் படிக்கிறதை கணக்குல சேர்த்துக்கலை, மத்தபடி ஆனந்த விகடன், குமுதம், முத்தாரம் இதெல்லாம் ஒன்னாங்கிலாசுலே இருந்தே படிக்க ஆரம்பிச்சிட்டேன். நான் சின்ன வயசுல பிஞ்சுல பழுத்த குரங்குக் குழந்தையா இருந்ததுக்கு இதுவும் காரணும்னு நினைக்கிறேன். நாலாங்கிலாசு போனப்புறம் எல்லா தொடர்கதைகளையும் படிப்பேன். நானும் எங்கக்காவும் எப்டின்னா காலையில் எழுந்ததில் இருந்து டான்ஸ் கிளாசு, பாட்டு, வீணை(எங்கக்கா மட்டும்), வயலின், ஹிந்தி, டைப்ரைட்டிங், ஷார்ட்ஹேன்ட்(எங்கக்கா மட்டும்) இப்டி கால்ல ரெக்கயக் கட்டிக்கிட்டு திரிவோம், அப்டி இருந்தப்போ இந்தப் புத்தகங்கள் படிக்கும் பழக்கம்தான் எங்களுக்கு பெரிய பொழுதுபோக்கு.எனக்கு தமிழில் இப்படி எழுத்தாளர்களின் அனுபவங்கள், சுயசரிதைகள், கட்டுரைகள் இவற்றை படிக்க ரொம்பப் பிடிக்கும். சிறுகதைகளும் பிடிக்கும். ஆனா நாவல்கள் படிக்கவே பிடிக்காது. அதே ஆங்கிலத்தில் சுயசரிதைகள் மற்றும் நாவல்கள் படிக்க ரொம்பப் பிடிக்கும். சிறுகதைகள், கட்டுரைகள் இதெல்லாம் ஆங்கிலத்தில் படிக்கப் பிடிக்காது. காரணம் தெரியல.
நான் முதல்ல படிச்ச புத்தகம்னா 'மெரீனா' அவர்களோட சுயசரிதைதான். இன்னிவரைக்கும் என்னோட பேவரிட்னா இதுதான். திமுக குடும்பங்கரதால திராவிட எழுத்துக்கள் குவிஞ்சிருக்கும். பெரியாரோட எழுத்துக்களை படிச்சப்புறம்தான் பலத்தில் எனக்குக் கொஞ்சமாவது என்ன எதுன்னு விடைகள் கிடைச்சுது. இதற்கு முன்னர் அண்ணாவோட கட்டுரைகள் படிச்சிருக்கேன். கதைகள் சிலதும் படிச்சிருக்கேன். குமரிக்கோட்டம் படிச்சிட்டு என்னடாது அண்ணா அவர்கள் இப்டி ஒரு மேட்டர் கதை எழுதிருக்காரேன்னு நெனச்சேன். அதை எப்படி பார்க்கணும், புரிஞ்சுக்கணும்னு சொல்லிக்கொடுத்தது பின்னர் படிச்ச பெரியாரின் கட்டுரைகளும், எழுத்துக்களும்தான்.
எங்க வீட்ல இல்லாத இலக்கிய இலக்கண புத்தகங்களே இல்லை.எனக்கு கவிதைகள் ஒன்னுமே புரியாது, அதனால் பிடிக்காது. ஆனா எங்க அப்பா ஒரு கவிஞர்:):):) எங்கக்காவும் சூப்பரா கவிதை எழுதுவாங்க, ரசிப்பாங்க.
சோ அவர்களோட பல நாடகங்களின் புத்தக வடிவம் படிச்சிருக்கேன். வேலன் சார் சொன்னா மாதிரி ஒரு காலத்தில் சூப்பரா இருந்தது, இப்போ சப்பையா தெரியுங்கரத்துக்கு இவர் ஒரு வாழும் உதாரணம். கல்கி அவர்கள் காலத்து கட்டுரைகள் கூட எங்க பாட்டி(அப்பாவோட அம்மா) சேர்த்துவெச்சிருந்தது எங்க வீட்ல இருக்கு. அவரோட கட்டுரைகள் கல்கில வருதே, அதுல பலதை நான் ஏற்கனவே படிச்சிருக்கேன். இது மட்டுமில்லாம ஐம்பதுகளில் இருந்து எண்பதுகளின் இறுதிவரை வந்த வாரயிதழ்களிலிருந்து பலக் கட்டுரைகள், கதைகள், திரைப்பட விமர்சனங்கள் எல்லாத்தையும் எங்கப்பா சேர்த்து வெச்சிருக்கார். நான் எல்லாத்தையும் ஜாலியா படிப்பேன்.
இப்போ வலையில் ஜெயமோகன் அவர்களோட அனைத்து படைப்புகளையும் படிப்பேன். அனைத்திலும் இவர் வல்லவர் எனினும், இவரோட பகடி, நகைச்சுவை வகை எழுத்துக்களுக்கு நான் அடிமை:):):) சுஜாதா அவர்களோட பல்சுவை கட்டுரைகள் பிடிக்கும். ஆனா சிலசமயம், தொடர்ந்து வித்தியாசம் இல்லாம இவரோட கட்டுரைகள் வரும்போது போரடிக்கும். பயணக் குறிப்புகளையும் அது சார்ந்த விஷயங்களையும் இப்டி சுவாரசியப் படுத்த முடியுமா என வியக்க வைத்தவர் எஸ்.ராமகிருஷ்ணன். இவர் எழுத்துக்களின் கலெக்ஷன் என்னிடம் உண்டு. சுந்தரராமசாமி அவர்களோட படைப்புகள் படிச்சதில்லை, ஆனா அவரோட கடிதங்கள் ரொம்பப் பிடிக்கும். அதுவே ஒரு தனி அனுபவம். எங்கக்காவோட கடிதங்களுக்கு அவர் பல சமயம் பதில் எழுதி அதனால் கிடைத்த அறிய அனுபவம்.
கலைஞரோட சட்டமன்ற அனுபவங்களின் தொகுப்பகளை கொண்ட புத்தகங்களை அவர் எங்கக்காவுக்கு பரிசா கொடுத்தார். அவர் கையெழுத்தோட இருக்கிற அந்தப் புத்தகம் என்னோட பேவரிட். இவரோட கடிதங்கள் அருமையோ அருமையா இருக்கும். அதேப்போல ராஜிவ் காந்தி அவர்களைப் பற்றி சோனியா அவர்கள் எழுதின புத்தகத்தையும் அவரோட கடிதத்தோடவும் கையெழுத்தோடவும் அனுப்பி வைத்தார்கள். அது தெரியாம இவ எனக்கு வரலைன்னு சொல்லவும், இன்னொரு புத்தகமும் அனுப்பினார்கள். அப்போல்லாம் எங்கக்கா காலேஜ் லீவில் தான் வருடம் முழுதும் படித்த எழுத்துக்களைப்பற்றி, அதன் ஆசிரியருக்கும் அதில் கூறப்பட்டவர்கள் இப்பொழுது இருந்தால் அவர்களுக்கும் தான் உணர்ந்ததை பற்றி கடிதங்களையும் விமர்சினங்களையும் அனுப்புவார். அதில் முக்காவாசிப்பேர் தன் கைப்பட பதில் எழுதுவார்கள். அப்படித்தான் பல விலைமதிப்பற்ற கடிதங்கள், புத்தகங்கள் எங்கள் வீட்டில் அப்பொழுது சேர்ந்தது. எழுத்துக்கள் அவர்களின் எண்ணங்களை பிரதிபலித்தாலும் கடிதங்கள் அதுவும் அழகான நீண்ட கடிதங்கள் அவர்களின் வேறொரு சுவாரசியமான உலகை நமக்கு திறக்கும்ங்கர்த்து என்னோட அனுபவம்.
archie பிடிச்சாலும் மத்த படக்கதை வடிவங்கள் அதனளவு கவர்ந்ததில்லை. லிட்டில் ரெட் ரைடிங் ஹுட்ல இருந்து சிந்த்பாத் தி சைலர் வரை எல்லாமே புத்தக வடிவில்தான் படிச்சிருக்கேன். அப்புறம் ஆறாங்கிலாசுலருந்து ஸ்டார் டஸ்ட் சினி பிளிஸ் ஆரம்பிச்சு படிக்காத சினிமா இதழ்களே கிடையாது.அப்பால எட்டாங்கிளாசு டீனேஜ் வயசு,கேக்கனுமா, பெண்களின் சரோஜாதேவியாகிய mills & boon, harlequinல ஆரம்பிச்சு எல்லாத்தையும் படிப்போம். அப்புறம் எல்லா நடிகைங்களும் படிக்கிறாங்களேன்னு சிட்னி ஷெல்டன், ஜெப்ரி ஆர்ச்சர் புக்ஸை படிக்க ஆரம்பிச்சேன். இவங்களோட பிளஸ் என்னன்னா, நாவலோட தீம் சப்பையா இருந்தாலும் முக்கிய மேட்டர் நல்லா இருக்கும். விடாது கருப்பு ஆரம்பிச்சவுடனே ஸ்பிலிட் பர்சனாலிட்டின்னு கண்டுபிடிச்சதுக்கு சிட்னி ஷெல்டன் தான் காரணம்:):):)
அப்புறம் கல்யாணக் கனவு ஆரம்பிக்கிற சீசன்ல டேனியல் ஸ்டீல் நாவல்கள் படிக்க ஆரம்பிச்சேன். முதல் நாவல் ஓகே, அப்புறம் நான் இதை படிக்கிறதுக்கு டிவி சீரியலே பார்ப்பேனேன்னு தோணிடுச்சி. அப்புறம்தான் நான் john grisham, michael connelley மாதிரியானவர்களின் நாவல்கள் படிக்கும் பழக்கம் ஆரம்பிச்சுது. இவங்கெல்லாம் மினிமம் கேரண்டி ஆளுங்கல்லையா:):):)
இப்போ காலேஜ் வந்தாச்சு. இப்போதான் என்னோட நண்பர்களான பழைய புத்தகக் கடைக்காரங்க அறிமுகமானாங்க. என் ரங்கமணி சில சமயம் இவங்கக்கிட்ட படிப்பு சம்பந்தமா சிலப் பொக்கிஷம் இருக்குன்னு அள்ளிக்கிட்டுப் போவார். ஆனா நான் அந்த லூசுத்தனமெல்லாம் செய்யாம, மத்ததைத்தான் வாங்குவேன். olivia goldsmithல இருந்து பல ரொமாண்டிக் நாவல்கள், mad collections, பல பகடி வகை கார்ட்டூன் தொகுப்புகள், ஆர்.கே.நாராயணனோட பெரும்பான்மையான புத்தகங்கள், ஸ்ரீதர் சார்ல இருந்து பலப் பேரோட சுயசரிதைகள், கண்ணதாசன் அவர்களோட மனவாசம் படிச்சிருந்தாலும் வனவாசம் படிக்காததால ஒரு நிறைவே இல்ல, அதெல்லாம் இங்க வாங்கினேன். அவரோட கேள்வி பதில்கள் புக் ரொம்பப் பிடிக்கும். பாரதிதாசன் அவர்களோட நிஜஇல்லற வாழ்க்கையை பத்தின ஒரு சுவாரசியமான நூல் இங்கக் கிடைச்சுது, எங்கப்பாவே அசந்துட்டார்.
நான் காலேஜ் படிச்சப்போ the da vinci code படிக்கிறது செம ஹாட்டா இருந்துச்சி. ஆனா செம போங்கா எனக்கு தோணினதால பாதியிலயே விட்டுட்டேன். என் ரங்கமணி இத வெச்சு நிஜமாவே இருக்கிற எல்லாக் கதைகளையும் சூப்பரா சொல்வார், அதால் இதவிட இவரோடது நிஜமாகவும் சுவாரசியமாகவும் இருக்கும்.
இப்போ என்னோட ஆதர்ச எழுத்தாளர்கள் Madeleine Wickham/Sophie Kinsella, nick hornbyமற்றும் marian keyes. இவங்களோட அனைத்து படைப்புகளையும் வெச்சிருக்கேன். இவர்கள் தவிர lauren weisberger, candace bushnell, jennifer weiner,Cecily Von Ziegesar,helen fielding இப்டி நெறயப் பேர். இவங்கெல்லாம் பொதுவா ரொம்ப நல்லா விமர்சிக்கப் படுறதில்லை. ஆனாலும் எனக்கு ரொம்பப் பிடிக்கும் ஏன்னா இவங்களோட கதையில் இருக்கிற ஒரு சாதாரண கேரெக்டர் மற்றும் அதிலுள்ள நிஜ வாழ்வில் சந்திக்கக்கூடிய மாந்தர்கள், அவர்களின் குணாதிசயங்கள், சூழ்நிலை, சின்ன சின்ன வித்தியாசங்கள், அவை கொண்டுபோகும் பாதைகள், மிக மிக பணக்காரத்தனமான சூழல், அவர்களின் எதிர்பாப்புகள், அவர்களின் சாதாரணங்களும் நியாயங்களும் எப்படி நம்மிலிருந்து வேறுபடுகின்றன இப்டி சொல்லிக்கிட்டே போகலாம். stephen clarke அவர்களோட merde novels சொன்னா மாதிரி வித்தியாசமான(அதாவது முக்காவாசி உண்மை, கால்வாசி உடான்ஸ்) பிரெஞ்சு வாழ்க்கை முறையை ஜனரஞ்சகமா சொல்றது கொஞ்சம் சுலபமா நமக்கு சில வாழ்வியலை புரியவைக்கும்னு எனக்குத் தோணும்.
இந்திய வேருடைய ஆங்கில எழுத்தாளர்கள் ஒரு தனி அழகான அணியைச் சேர்ந்தவர்கள். ரொம்ப ஜாஸ்தி பரிச்சியமில்லைன்னாலும் இவர்களில் எனக்கு ரொம்பப் பிடிச்சது chitra banerjee divakaruni, preethi nair, anita desai(kiran desai அம்மா), anita nair, chetan bhagat இவங்கெல்லாம் ரொம்பப் பிடிக்கும். இவங்களோட முக்காவாசி நூல்களை படிச்சிருக்கேன். சிலது செக்கண்ட்ஸ்ல வர்றவரைக்கும் காத்திருக்கணும்:):):)
எப்பவுமே எனக்கு சரித்திர பின்னணிக் கொண்ட கதை, புதினங்களை விட, பல்வேறு கோணங்களில் எழுதப்பட்ட ஆராய்ச்சிக்கட்டுரைகள் மற்றும் வாய்வழி தகவல்கள் ரொம்பப்பிடிக்கும். இந்தக் கலெக்ஷன்ஸ் ஒரு பொக்கிஷம் மாதிரி என் ரங்கமணி வெச்சிருப்பார்.இப்போ நெட்லயும் கெடைக்காததே இல்லையே. science fiction எப்போவாவது படிப்பேன். பயணக் கட்டுரைகள் சிலப் பேரோடது நல்லா இருக்கும். ஆனா முக்காவாசிப் பேர் புவியியல் பாடம் படிக்கிற மாதிரி ஒரு பீல் ஏற்படுத்திடுவாங்க. தன்னோட பார்வையில் அழகான நகைச்சுவையோட இல்லைன்னா எளிமையான வகையில் எழுதினவைகள் ரொம்பப் பிடிக்கும்.
என்னோட மிகப் பெரிய வெறுப்புக்குள்ளான புத்தகங்கள் என்னன்னா தன்னம்பிக்கை ஏற்படுத்தரேன் பேர்விழி புத்தகங்கள். அவைகளைப் படிச்சா சாதாரணமான சூழலிலுள்ள ஒருத்தனுக்கு ரொம்ப ஈசியா சுயவிரக்கம் (self pity) வந்திடும். நமக்கு அந்த புக்கில் சொல்ற வெறியில்லையே, அவ்ளோ துணிவு இல்லையே, அசாதாரண சூழ்நிலைகள் இல்லையே, எல்லாம் நார்மலா இருக்கே, இப்டி வித விதமா தோணி ஒழுங்கா இருக்கிறவன் கூட முன்னேறாமப் போக வாய்ப்புண்டுன்னு தோணும்.
தெனாலிராமன், பீர்பால், முல்லா இப்படிப்பட்ட அத்துணை அப்பாவி அறிவுஜீவி கதைகளும் ரொம்பப்பிடிக்கும்.பக்திக்கதைகள், கட்டுரைகள் எனக்கு போரடிக்கும். பிலசாபிக்கள் நாவல்கள், நூல்கள் எல்லாம் எனக்கு பேத்தலா தெரியும். அன்றாட வாழ்விலிருந்தும், சாதாரண நூல்களிலிருந்தும் புரிஞ்சுக்காததயா இதுல சொல்லிடப் போறாங்கன்னு தோணும். பிளஸ் சிலப்பேர் இத படிக்கிற ஒரே காரணத்தால ரொம்ப அதிமேதாவித்தனமா இருக்க முயன்று, முழு லூசா சுத்தரதாலையும்:):):)
இதுக்கு மேல பிளேடு போட பயமாயிருக்கரதால இத்தோட முடிச்சிக்கரேன்.
என் தந்தை சௌந்திரராஜன் (என் தங்கை கல்யாணி மாதிரி)
எனக்கு படத்தோட மொதோ அஞ்சு நிமிஷம் பிடிச்சது. அது ஒரு அழகான செல்ப் பில்ட் அப்பா பத்தின படம்னு நெனக்க வெச்சுது. ஆனா அப்புறம் தான் எங்கப்பாவை பத்தி என்னை உணர்வுப்பூர்வமா சிந்திக்கவெக்கப்போற படம்னு புரிஞ்சது. எப்டின்னு கடசீல சொல்றேன்.
எங்க அம்மா வீட்டு சைட்ல முக்காவாசிப்பேர் ஜாலி பீட்டோரோஸ்பதி குடும்பங்கள்தான். ஆனா படத்துல அதைக்கூட சரியா காட்டலை. அந்த பீலே இல்லாம, விவேகானந்தா கோர்ஸ்ல படிச்சிட்டு வீட்ல பேசி பழகுறவங்களாட்டம் தெரிஞ்சுது. அடுத்தது படம் முழுக்கபல காட்சிகளில் cliché தூவிட்டா போதும்னு நெனச்சிட்டாங்களோ என்னமோ, செம பவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ்......
அப்பாவை இவர்(பையன் சூர்யா) நெஜமாவே ரோல்மாடலா எடுத்தாரான்னே புரியல. திடீர்னு பாத்தா ஒரே பாட்ல (ரெண்டு வருஷத்துக்குள்ள) எல்லாத்தையும் சாதிச்சிடறார். இதுக்கு 'யாரடி நீ மோகினி'ல தனுஷ் செஞ்ச ஒரே நைட் கோடிங் அளப்பரயே பரவாயில்ல. போதைக்கு அடிமயானப்புறம் பாடற அஞ்சல பாட்டை சாவுக் கூத்துங்கறார், ஒடனே அவர் நண்பர் 'ஷிட்'னு சொல்றார்.
என்னமோ இலக்கியத் தந்தைங்கறார், அதை கொஞ்சம் கூட அழகியலோட காட்சிப்படுத்தலே. இன்னும் சொல்லப்போனா, இவங்க புரிதலை நமக்குப் புரியவெக்கிறேன் பேர்விழின்னு, தேவர் பிலிம்ஸ் படம் மாதிரி விளக்கமா, அவர் ஹிந்திப்பாட்டை ரசிக்கிறது, பீட்டர் புத்தகம் படிக்கிறது, மனைவியை டார்லிங்க்னு கூப்பிடறதுன்னு 'ரம்பம்'பம் ஆரம்பம்தான்.
சூர்யாக்கு 'டாடி'ன்னு கூப்பிடறது பிடிக்காதுன்னா, முதல்லயே இயக்குனர் கிட்ட சொல்லிருக்கலாம், இப்டி படம் முழுக்க அதை ஒருவித அவஸ்தையோட சொல்லிருக்கவேணாம். சூர்யா கெட்டப் சேஞ் ஓகே, ஆனா அவங்க ரிலீஸ் பண்ண புகைப்படங்கள்ல இருந்த பிரம்மிப்பு படம் பார்த்தப்போ ஏற்படலை:(:(:(
சிம்ரன் நல்லா இருந்தாங்க, அவங்க அம்மா ரோல் நல்லா இருந்தது. திவ்யா நல்லாத்தான் இருக்காங்க, ஆனா அவங்க பாத்திரம் பத்தி திட்ற அளவுக்குக் கூட காட்சிகள் இல்லை.
'போந்தான்' அப்டின்னு சொல்வாங்க, அப்டி இருக்காங்க சமீரா. அடப்பாவிகளா, விஜய் மல்லய்யா புடிக்கலைன்னா இப்டியா குடும்பத்தை வெச்சு பழிவாங்குவீங்கன்னு தோனுச்சி. எனக்கு இவங்கள டர்னா மனா ஹைல இருந்து பிடிக்கும். இந்தப் படத்துல கிர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்ர்னு ஆகிடுச்சி.
பிளாஷ்பேக் சப்பை. எம்சிசில நடக்குதாம், அடப்பாவிகளா ஏரியா ஆளுங்கள வெச்சிக்கிட்டே இப்டி டுபாக்கூர் பண்றாங்களேன்னு இருக்கு.
கேரியர் சேஞ் பண்றது சரி, பல இடங்களில் நடப்பதுதான். ஆனா ராணுவத்துக்கு போறது அவ்ளோ ஈசியா? நடைமுறை எப்டின்னு எனக்குத் தெரியல. என் கிளாஸ்மேட் ஒரு பையன், நேவில சேர எக்கச்சக்கமா உழைச்சான், அந்த எக்சாம்கு அவ்ளோ படிச்சான். இதுல சர்வ சாதரணமா எல்லாம் முடிஞ்சிடுது. பிளஸ், வயசு, கணக்குல கொஞ்சம் இடிக்குது. சரி, நான் ஜாஸ்தி சொல்லமுடியாது, ஏன்னா அது ஒரு பெரிய துறை, எனக்கு நெறைய விஷயம் தெரியாம இருக்கும்.
நானெல்லாம் நாலு மணிநேர படம்னாக் கூட ஒழுங்கா இருந்தா பாப்பேன்(வேலையா வெட்டியா:):):)) .அப்டிப்பட்ட என்னயே அரைமணிநேரத்துல கடிகாரம் பாக்க வெச்சுட்டாங்க.
பாட்டு சூப்பர், வரிகள் இனிமையா இருக்கு. ஆனா அதை இவர் படமாக்கின விதம், ஹாரிஸ் இவரை விட்டுப் பிரிஞ்சது சரிதான்னு தோனுது. பின்ன அவர் அவ்ளோ நல்லா 'காப்பி' போட்டுக் கொடுத்தா, அதை ஒழுங்கா குடிக்கக்கூட செய்லைன்னா எரிச்சல் வராது?
பொதுவா எனக்கு கற்பனைகளில் மிதக்க வெக்கிற படங்கள் பிடிக்கும், அதே மாதிரி நம்மளை யோசிச்சு புரிஞ்சிக்க வெக்கிற படங்களும்(அப்போதானே நமக்கு மூளைன்னு ஒரு வஸ்து இருக்கறதே ஞாபகத்துக்கு வருது)ஆனா அநியாத்துக்கு முழு படத்தோட லீடையும் கற்பனையிலையே ஓட்டிக்கோன்னு சொல்றதுதான் கடுப்பா இருக்கு.
முதல்ல சொன்ன விஷயம், இந்தப்படத்து அப்பா மகன் உறவு நம்ம அப்பாவை கொண்டாட வெக்குது, எப்டின்னா, அவங்களும் காட்சிப்படுத்த மாட்டேங்கறாங்க, நாமளும் உணர்வுப்பூர்வமா புரிஞ்சிக்க ஒரு லீட் அல்லது ஒரு சீன் வெக்க மாட்டேங்கறாங்க. நாம உக்காந்து படத்த பார்க்க போரடிக்குது, ஆனா அப்பாவை கொண்டாடுற படமாச்சே, தப்பா சொல்லக்கூடாது, இந்தப் படத்த பாக்காம நாம நம்ம அப்பாவை பத்தி யோசிப்போம்னு, எப்டியோ அவங்கவங்க தந்தையைக் கொண்டாட வெக்கிறாங்க. ஒரே நல்ல விஷயம்னா, படத்தோட அப்பாவை சிலாகிச்சு, நம்ம அப்பா இப்டி இல்லையேன்னு யோசிக்க வெக்கல. நல்லவேள நம்ம அப்பா ஜாலியா, நார்மலா, க்யூட் திமிரோட இருக்கார்னு நெனக்க வெக்குது.
என் பதிவுக்கும் தலைப்புக்கும் இருக்கிற சம்பந்தம் கூட, வாரணம் ஆயிரம் தலைப்புக்கும் படத்துக்கும் இல்லை.
நேயர் விருப்பக் கவுஜ (நிலா அப்பா)
உங்க வீட்டுக்குத் தேவையா கோணி ?
நீங்க குடிக்கிறது பானி,
நாங்க குடிக்கிறதுதண்ணி
ரைடுக்குத் தேவையாபோனி?
அதுக்குக் காலுல அடிக்க வேணும் ஆணி:):):)
இன்னைக்கு முடிஞ்சது என் பணி.
வலைச்சரம்ல நிலா அப்பா பின்னூட்டத்தை நக்கலடிச்ச கிருஷ்ணா சாரை(பரிசல்காரன்) இந்தக் கவுஜய ஆயிரம் முறை படிக்க வெச்சு, 'பிம்பிலிக்கி பிலாபின்னு' கத்த வெக்கணும்:):):)
செருப்பும் தீவிரவாதமும்
இந்தத் தொடருக்கு என்னை அழைத்த முத்துலெட்சுமி கயல்விழி அவர்களுக்கு மிக்க நன்றி. எனக்கு இதைப்பற்றி வழக்கம்போல பெரிதாக ஒன்றும் தெரியாது. இதில் கூறப்பட்டுள்ள விஷயங்களில் ஏதேனும் தவறிருந்தால் பின்னூட்டத்தில் சுட்டிக்காட்டுங்கள் நண்பர்களே, திருத்தி விடுகிறேன்.
தீவிரவாதத்திற்குக் காரணம் அரசியல்வாதிகள்தான் என்பதோ, சட்டம் போட்டால் அனைத்தையும் அடக்கி விடலாம் என்பதோ நம் சூழலில் பொறுப்பான பதிலில்லை. காரணங்கள் எப்பொழுதும் மக்களின் மனவோட்டத்தை பொறுத்தது. குஜராத், பம்பாய் என எங்கு கலவரம் நடப்பதற்கும் வெறும் தலைவர்களே காரணம் அல்ல. அவர்களின் எழுச்சிக்கு மக்களே காரணமாக இருக்கின்றனர். சொன்னதை பத்தாகச் செய்கின்றனர், பின்னர் வசதியாக தலைவர்களை தூற்றுகின்றனர். பல ஊடகங்களும் மிக வெற்றிகரமாகவே இந்தக் கூற்றுக்கு நெய் ஊற்றுகின்றன. உணர்ச்சிவசப்பட்டவனுடைய மூளையைச் சலவை செய்வதில் ஊடகங்களுக்கு இணையுண்டா? ஆதலால் இத்தகையக் காரணங்களைப் பற்றி நான் இங்கு எழுதவில்லை.
நம்முடைய நாட்டில் உள்ள பேப்பர் பார்மாலிட்டீஸ் ஒழியாதவரை, அரசு அலுவல்களில் டிரான்ஸ்பரன்சி வராதவரை, தீவிரவாதம் உள்ளிட்ட அனைத்து சமூக விரோதப் போக்கும் செழித்தோங்கிக் கொண்டுதான் இருக்கும். இந்த முட்டாள்தனமான அலுவலக நடைமுறைகளை மாற்றினாலே போதும், நாட்டில் பல்வேறு பிரச்சினைகளில் தீர்வு ஏற்படுவதற்கு. ஒரு சாதாரண ஊரின் சாலை சரியில்லை என்று ஒரு கடிதம் எழுதியதற்கே நேரடியாக எவ்வளவோ நடவடிக்கை எடுத்த முதல்வரும் உண்டு, அப்படியும் முதல்வருக்கே டேக்கா கொடுத்த அரசு ஊழியர்களும் உண்டு. இதற்குக் காரணம் என்ன?
ஒரு சாதாரணக் குடிமகனுக்கு வெளிநாடு செல்ல தேவைப்படும் சிகப்பு முத்திரைக்கு குறைந்தபட்சம் ஒரு வாரமாவது அரசு ஊழியர்கள் நொட்டாங்கை வேலை செய்ய வேண்டும். அது தேவைப்படுபவர் அடுத்த பத்து நாட்களுக்கு எல்லாவற்றையும் ஒதுக்கி விட்டு அது பற்றியே சிந்தித்து ஊண் உறக்கமின்றி களப்பணி ஆற்ற வேண்டும். நடைமுறை கீழே:
தலைமைச் செயலக எக்ஸ்டர்னல் அபேர்ஸ் துறை ->மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ->தாசில்தார் அலுவலகம் ->கிராம நிர்வாக அலுவலகம்(இரண்டு கட்டம்) ->பதிவாளர் அலுவலகம் ->கிராம நிர்வாக அலுவலகம் ->தாசில்தார் அலுவலகம் ->மாவட்ட ஆட்சியர் அலுவலகம் ->தலைமைச் செயலக எக்ஸ்டர்னல் அபேர்ஸ் துறை.
மாதத்தில் பாதிநாள் சென்னையில் ஏதேனும் காரணம் சொல்லி தங்கிவிடும் மாவட்ட ஆட்சியர், அவர் சம்பந்தப்பட்ட கடிதப்போக்குவரத்துகளில் உள்ள நடைமுறை சிக்கல்கள் பிளஸ் கடிதங்களை டீல் செய்யும் கலெக்டர் அலுவலக ஊழியர்கள், சிறுதாவூர் பிரச்சினையில் இருந்து, அன்றே தன் அலுவல்கள் அனைத்தையும் முடித்துக் கொடுக்க வேண்டும் என்று நெறுக்கும் இராணுவ அதிகாரி வரை அத்துணை விஷயங்களையும் அப்பொழுதே கவனித்தாக வேண்டிய நிலையிலிருக்கும் தாசில்தார், பிறப்பு இறப்பு சான்றிதழில் இருந்து அரசு வழங்கும் பல நலவுதவித்திட்டங்கள் வரை அனைத்தையும் கவனிக்க வேண்டிய அவருடைய அலுவலகத்தினர், உள்ளாட்சித் தேர்தலில் இருந்து, நில அளவுப் பிரச்சினைகள் வரை அனைத்தையும் சரிபார்த்து செய்ய வேண்டிய நிர்பந்தத்தயுடைய கிராம நிர்வாக அதிகாரிகள் அல்லது அவர்களுக்கு நிகரான பதவியில் உள்ளவர்கள். தரகரின்றி நெருங்கவே முடியாத கிட்டத்தட்ட கலவர பூமிபோன்ற தோற்றத்தை உடைய, காட்சிகளை பெற்ற பதிவாளர் அலுவலகங்கள். இவையனைத்தையும் தாண்டி செக்ரடேரியட்டில் வேலைப்பார்க்கும் ஒரு ஊழியரின்(கடைநிலை ஊழியர் என்றால் பிளஸ்) உதவியின்றி சுறுசுறுப்பாக வேலை நடக்காத தலைமைச் செயலக எக்ஸ்டர்னல் அபேர்ஸ் துறை என்று சொல்லிக்கொண்டே போகலாம்.
எதற்கு இப்படிப்பட்ட ஒரு பைத்தியக்காரத்தனமான நடைமுறை? ஏன் இன்னமும் அனைத்து நிலைகளிலும் அத்துணை கடிதங்கள் எக்கச்சக்க ரெபரென்ஸ் எண்களோடு?
ஏன் எங்குமே வெளிப்படையான அணுகுமுறை இல்லை. என் ஒருத்தியின் காரியத்திற்கே இத்துணை பேர் இவ்வளவு நேரத்தை செலவிட்டால் அவர்கள் எப்படி முக்கிய விஷயங்களில் கவனம் செலுத்துவார்கள்?
இதன் பலன்தான் என்ன? ஏன் எப்பொழுதுமே அனைத்து அரசு அலுவலகங்களிலும்மிக மோசமான அளவில் ஆள் பற்றாக்குறையுள்ளது? இந்தச் சூழலிலும் குறைந்தபட்ச மனசாட்சியோடு பெரும்பான்மையான அரசு ஊழியர்கள் செயல்பட்டாலும் எங்கும் எதிலும் அவப்பெயரே மிஞ்சுவதன் காரணமென்ன?இந்தப் பணிச்சூழலில் தானாக லஞ்சம் வரத்தானே செய்யும்? சிலசமயம் அவர்களின் பணிச்சுமையைப் பார்த்து எனக்கே அவர்களுக்கு ஏதாவது செய்ய வேண்டும் என்று தோன்றியதே, காரணம் என்ன? குமாஸ்தா டைப் வேலைகள் பெரியளவில் ஆர்வத்தை தூண்டுவதாக இருக்காதுதான், ஆனால் இப்படி பத்தாள் வேலையை ஒருத்தர் மேலேயா சுமத்துவது?
அனைவரையும் விடுங்கள் கிராம நிர்வாக (அல்லது அதற்கு நிகரான)அலுவலகங்களிலே பணியாற்றுபவர்கள் என்ன தேவதூதர்களா அத்துணை காரியங்களை கவனிப்பதற்கு? இந்த சூழ்நிலையில் அவர்கள் வேறெப்படி செயல்படுவார்கள்? இதில் பல்வேறு விஷயங்களில் மாதத்திற்கொரு மாற்றம் என்று கடுப்பேத்துவது வேறு.
சமூக விரோதிகள் இந்த நடைமுறைகளால் லாபம்தானே அடைவார்கள்? தொல்லைகள் நிறைந்த இடங்களில் தொய்வுதானே ஏற்படும்? கடைசியில் யாரும் எதிலும் அக்கறை செலுத்துவதில்லை.
கமேண்டோக்கள் வருகையில் இருந்து, தரமான பாதுகாப்பு உடைகள் வரை அனைத்திலும் பிரச்சினை ஏற்பட்டது பெரும்பான்மையாக நிர்வாக சீர்கேட்டினால்தானே?
ஒரே ராத்திரியில், குடும்பத்தின் ஒரே சம்பாதிக்கும் நபர் இறந்து, எதிர்காலமே கேள்விக்குறியாகி, பெற்றோர்களே ஏழ்மையால் மற்றொரு பாரத்தை சுமக்க பயந்து ஒதுங்கி, ஒருவேளை பிழைத்தாலும் எட்டாக்கனியான மருத்துவத்தை அண்ணாந்து நோக்குவதையே தினப்படி வாழ்வாக ஏற்றுக்கொண்டு, இத்தனை ஏமாற்றங்களையும் சந்தித்த பின்னும் 'ஏதாவது வேலை போட்டுக் கொடுத்தால் பரவாயில்லை', என கெஞ்சும் மக்களை கொண்ட சமூகம் இது.
கிட்டத்தட்ட 'நாளை' எனும் சொல்லே கேள்விக்குறியாகி உள்ள இவர்களுக்கு குறைந்தபட்சம் இறப்புச் சான்றிதழ் பிரச்சினையின்றி கிடைக்க வேண்டும், சொந்தப் பகையை தீர்த்துக் கொள்வதற்காக அதனைக் கூட திருடிச் செல்லும் மைத்துனர் அமையாதிருக்கவேண்டும்.
பனிரெண்டாம் தேதி கார்கரே அவர்களின் பிறந்தநாள், பதிமூன்றாம் தேதி நாடாளுமன்ற தாக்குதலில் உயிர்நீத்தவர்களின் நினைவுநாள். அஞ்சலி செலுத்த வந்த தலைவர்களின் எண்ணிக்கை:(:(:(
கார்கரே மனைவியால் ஒரு கோடி வேண்டாம் எனக் கூற முடியும், ஆனால் இறந்த கான்ஸ்டபில்களின் குடும்பத்தாரால் கூற முடியுமா? பொருளாதாரம்தானே பல நேரங்களில் நம்முடைய சுயமரியாதையை தீர்மானிக்கிறது.
இப்படிப்பட்ட நிலையில், கிட்டத்தட்ட பாதுகாப்பு ஏற்பாடுகளா கிலோ என்ன விலை என்கின்றன நட்சத்திர விடுதிகள். கேட்டால், இதெல்லாம் அரசாங்கத்தின் வேலை, பாதுகாப்புத்துறையின் வேலை என்கின்றனர். நூற்றுக்கு நூறு சரிதான். ஆனால் பம்பாய் போன்ற நகரங்களில் தங்க வரும் சுற்றுலாப் பயணிகள் மற்றும் அயல்நாட்டு அலுவலர்கள் இவர்களின் விடுதியை நாடுவதேன்? இங்கெல்லாம் குறைந்தபட்ச பாதுகாப்பாவது இருக்கும் என்றுதானே? அண்டை நாட்டில் இதைவிட பயங்கர தாக்குதல் மற்றொரு விடுதியில் நடைபெற்ற போதே கொஞ்சமாவது உஷாராகியிருக்க வேண்டாமா? முன்பக்க வாசல் வழியாக வருவதற்கு அவர்கள் என்ன இவர்கள் வீட்டு மாப்பிள்ளையா? எப்படி தீவிரவாதிகளுக்கு அவ்வளவு துல்லியமாகத் திட்டமிட முடிந்தது என்ற கேள்விஎழும்போது, அதற்குக் கிடைக்கும் பதில்கள் ஆச்சர்யமூட்டுகின்றன. அப்படிஎன்றால் இங்கு இவர்களைப்போன்றவர்கள் இதே மாதிரி முஸ்தீபுகளுடன் தங்குவது சாதாரணம், என்ன இந்த முறை இங்கேயே தாக்குதல் நடத்திவிட்டார்கள் போலிருக்கிறது.
ஒருவேளை, இங்கெல்லாம் ஹவாய் செருப்புப் போட்டுக் கொண்டு வருபவர்களுக்குத்தான் அனுமதி இல்லை போலும். துப்பாக்கி மற்றும் இன்னபிற ஆயுதங்களோடு வருபவர்களுக்கு பிரச்சினை கிடையாது போலிருக்கிறது.
கார் இல்லாத கார் கீ / காமன் சென்ஸ் இல்லாத மனுஷன்:):):)
கல்லூரிச்சாலை
ஈசிஆர்ல இருக்கிற பற்பல பொறியியல் கல்லூரியில ஒண்ணுலதான் நான் படிச்சது. அப்போ இருந்த கடைசி வருஷ பசங்கதான் , எங்க கல்லூரியோட முதல் செட். அக்கா தங்கை குரூப்பாட்டம், ஒரு பொறியியல் காலேஜ் வெச்சா இன்னொன்னுக்கு அனுமதி இலவசம்ங்கர மாதிரி இஷ்டத்துக்கு தொடங்கினாங்கல்ல, அதுல ஒண்ணுதான் எங்க கல்லூரியும். ஒரு மிக பேமசான கல்லூரியோட லொடுக்கு தான் எங்க காலேஜ். மெயின் காலேஜை காமிச்சு இதுக்கு ஆள் பிடிப்பாங்க. பின்னாடி இதுவே ஒரு நல்ல நிலைமைக்கு வரும்னு அப்போ யாருக்குமே நம்பிக்கையில்லைப் போல. அதத் தொடங்கினதே சினிமாக்கு ஷூட்டிங் லொக்கேஷனுக்கு வாடகைக்கு விட நேர்ந்துக்கிட்டதுக்குதான்னு அப்போ தெரியாது.
இதுல இன்னொரு முக்கிய மேட்டரையும் பாக்கணும், எங்க தல காலேஜ் செம ஸ்டைலிஷான காலேஜ்ன்ற இமேஜ் உள்ள காலேஜுங்கறதுதான் நெறைய பேருக்குத் தெரியும். ஆனா மொதோமொதோ காலேஜுக்குள்ளயே கெஸ்ட் ஹவுஸ் கட்னது எங்க சேர்மேன்தானாம்:):):) குடுகுடுன்னு பேர் சொல்லிக் கண்டுபிடிக்கிறேன் பேர்விழின்னு கெளம்பிரக் கூடாது. நான்தான் முக்காவாசிப் பேருக்கு ஏற்கனவே சொல்லிருக்கேனில்ல.
நான் எப்டின்னா, நகை வாங்கணும்னா கூட மல்லூஸ் கடைக்கு போகக் கூடாதுன்னு நெனைக்கிற புத்தி சிகாமணி. குளிர்ல ஜன்னி அவங்கக்கா ஜனனின்னு யாரக் கண்டாலும் நாயர் டீ கடை பக்கம் மட்டும் போக மாட்டேன் அப்டிங்கற கொள்கை சிங்கம். அவங்க நல்லவங்க கெட்டவங்க, இப்டி அப்டின்னெல்லாம் பாகுபாடே பாக்கறதில்ல, மல்லூசா , மாங்காவக் கொட்டயோட முழுங்கரவங்கன்னு ஒரு முடிவோட , ஏமாந்தாலும் மத்தவங்க அரைக்கிற மொளகாயில குளிர் காய்வேனே ஒழிய மலையாளக் கரையோரம் ஒதுங்குவதில்லைன்னு செம காண்டா திரிவேன்.
காண்டா திரிஞ்ச காண்டாமிருகத்தோட கதைதான் நம்ம கதையோட டர்னிங் பாயிண்டும். அதப் பாக்குறத்துக்கு முன்ன இன்னொரு சின்ன ரம்பம்பம் ஆரம்பம்.
நான் எப்டியாப்பட்ட மாணவின்னா, வெறும் மெட்ரிக்குலேஷனுக்குன்னே பெத்து விடப்பட்ட ஆண்டாளு. எவ்ளோ பெரிய புக்கை வேணா கொடுங்க, என்ன வேணா கொடுங்க, எல்லாத்தையும் அந்த மாதிரி மக்கடிப்பேன். அதால பத்தாங்கிளாசெல்லாம் நமக்கு பர்பி மாதிரி இருந்திச்சு. அடுத்தது, ஸ்டேட்போர்ட்ல பதினொன்னும், கட்டம்கட்டி கலக்கினதுதான். இங்க என்ன கவனிக்க வேண்டிய விஷயம்னா, ஸ்டேட்போர்ட் பசங்க பத்தாவதிலே நல்ல மார்க் எடுத்தா, இந்த சூனாவானா மெட்ரிக் பசங்க அதை நக்கலடிப்பாங்க. ஆனா அடுத்த வருஷம், அந்த ஸ்டேட்போர்டுலயே தலையால தண்ணி குடிப்பாங்க. சரி, நம்ம விஷயத்துல நானும் பனிரெண்டாம் வகுப்பு பாதிவரை கலக்கலோ கலக்கல் தான். நானும் எல்லாத்தையும் கரைச்சு குடிச்சு மன்த்லி டெஸ்ட்ல இருந்து எல்லாத்திலையும் வாந்தி எடுக்கிறதுதான்.
'பிளஸ்டூ தேர்வில் மாநில அளவில் முதல் மதிப்பெண் பெற்றிருக்கும் இந்த நேரத்தில் நீங்க என்ன சொல்ல விரும்பறீங்க?
இந்த வெற்றிக்கு காரணம் என் குடும்பமும் நட்பும் மற்றும் ஆசிரியர்களோட முயற்சியும் ஊக்கமும்தான். எனக்கு பேக் போட்டு எழுதினதே இவங்கதான். ஆனா அந்த பத்தாங்கிளாசு பயாலஜி ஹேமா மிஸ் மட்டும் உள்ளதிலயே மோசம், அவங்கள மட்டும் இந்த ஆட்டத்துல சேத்துக்க வேணாம்.'
அப்டின்னு, (அடடா இதென்ன சயின்ஸ் பிக்ஷன் கதையான்னு பயந்திட வேணாம்)இப்டியாப்பட்ட ரேஞ்சில் பழைய தினத்தந்தியையும் ஹிந்துவையும் பாத்து பேட்டிக்காக மக்கடிக்கறதுதான், பிராக்டீஸ் பண்றதுதான்னு செம பார்முல இருந்தேன்.
இப்டி இருக்கிற ஒரு நேரத்தில் சினிமால என்னாகும், எதிர்பாராத சம்பவம் ஒன்னு நடந்து அந்தப் பொண்ணோட கனவுகள சிதைக்கும்ல, அது மாதிரியேத்தான் இங்கயும் ஆச்சு. உன்கனவு என்ன, இந்தியாவ வல்லரசாக்குறத்துக்கு தேமுதிக மகளிரணியில சேர்றதான்னு குறுக்கு கேள்வியெல்லாம் கேட்டு டார்ச்சர் பண்ணக் கூடாது. ஓகே, பேக் டு த ஜில்லெட் பிளேடு. கனவென்னமோ விக்ரமன் பட கதாநாயகியாட்டம் ஒரே பாட்டுல கலெக்டராகிடனும்னு இருந்தாலும், நானும் பி.வாசு சினிமாவின் யதார்த்தை புரிஞ்சிக்கக் கூடிய காலகட்டம் வந்திச்சு. ஆனா ரிசல்ட் தான் ராமநாராயணன் படமாகிடுச்சி. அதாவது மினிமம் கியாரண்டி, ஆனா சொல்லி பீத்திக்க முடியாத ரேஞ்சில் வெற்றி. புரட்யூசர்சுக்கு (அம்மாப்பாவுக்கு) நஷ்டமில்லைன்னு தோணினாலும், குரங்கு, நாய் (பள்ளி நிர்வாகம்) எல்லாத்துக்கும் லாபம்தான்னாலும், அதோட (செகன்ட்) ஹீரோ ஹீரோயின் பவ்வ்வ்வ்வ்வ்வ்வ்வ் ஆகிடுவாங்கல்ல அதுமாதிரி.
சொல்றத்துக்கு வேணும்னா பொருளாதார நெருக்கடில்லாம் ஒண்ணுமில்ல, அது இதுன்னு நல்லா இருக்கும். ஆனா அதை பங்கு வர்த்தகத்தில் பணத்த போட்டவங்கக் குடும்பத்துல போய் சொன்னீங்கன்னா தெரியும், வெத்தலையும் பாக்கும் இல்லாமயே வாய் வெத்தலப்பாக்கு போடுவது எப்படி அப்டீங்கறது.
இதுல இன்னொரு சோதனைன்னா, அக்காக்கு அப்போதான் குழந்தை பிறந்திச்சு. அவங்க மாசமா இருக்கிறப்போ அதை மறைக்கணும், ஏன்னா அவங்க மனசு பாதிக்கப்படக் கூடாது. அது குழந்தைய பாதிக்கும்னாங்க. இதெல்லாம் லாஜிக்கலா வேல செய்யுமா? அதை மறைக்க பாடுபடறேன் பேர்விழின்னு பட்ட டென்ஷன்ல, எரிச்சல் பல்வேறு விதமா அக்காமேலையே திரும்பும். சும்மாவே பிளஸ்டூ படிக்கிறவங்க மனசுல குத்தவுணர்ச்சி, குத்தவெச்சு உக்காந்திருக்கும். ஏன்னா, பொதுவா கண்டுக்காத விஷயத்து மேலயெல்லாம் நமக்கு அப்டி ஒரு ஆர்வம் வரும்ல. எனக்கோ இந்த பொருளாதார நெருக்கடி ஒருவித பொழுதுபோக்காகிடுச்சின்னு நெனைக்கிறேன். சுயவிரக்கம், பிளஸ் குற்றவுணர்ச்சி போதாதா, மக்கடிக்கிறதையும் நிறுத்தியாச்சு. மக்கடிக்கிற கலையோட பூர்ணத்துவமே(இல்ல பூர்ணத்தோட தத்துவமோ), நாம எப்போ புக்கை தொறந்தாலும், பிரஷ்ஷா, புத்தம்புது காப்பியா இருக்கும். ஸெலெக்டிவ் அம்னீஷியா அவங்கண்ணன், சாதா அம்னீஷியாவெல்லாம் துணைக்கு வந்திடும்.
இந்த கேட்டகிரில்லாம் என்ன செய்வாங்க, அதையேத்தான் நானும் செஞ்சேன். ஒடனே ஆர்வமா, தற்கொலை முயற்சியா, அப்டி இப்டின்னு ஆசைப்பட்டிரக்கூடாது. நாம இந்த மாதிரி சாதாரண மேட்டருக்கெல்லாம் என்னைக்கு பீல் ஆகியிருக்கோம், இந்தியா உலகக் கோப்பை ஸெமி பைனலில் தோத்துச்சுன்னா, சச்சின் அப்பா முக்கியமான நேரத்தில போய்ட்டதுக்கு அப்புறம் இந்தியாவோட நிலமைன்னு ஆயிரம் காரணத்துக்காக வர்ற ஒரு யோசனை, இப்டி சப்ப விஷயத்துக்கெல்லாம் சும்மான்னா வருமா?
அதால நான் தெனமும் எக்சாம் இருக்கிறப்போ காலையில் எழுந்ததில் இருந்து, பேப்பரை கட்டி குடுத்திட்டு(கட்டிக் கொடுக்கிற அளவுக்கு பேப்பரை வளத்து ஆளாக்கி எழுதினயான்னு நெனக்காதீங்க, அங்க இருக்க திரட்டை நான் மட்டும் விட்டுட்டுப் போனா பளிச்சின்னு தெரியும்ல, அதால அடிஷனல் ஷீட்டில்லாமயே வேலையக் காமிக்கறதுதான்) அப்பாடா ரிசல்ட் வர ஒரு மாசமாகும்னு நிம்மதியாகுறவரை, மேடம் க்யூரி , பெரியாருன்னு ஆரம்பிச்சு எல்லாரையும் கன்னாபின்னான்னு திட்டறதுதான். ஏன்னா அவங்கதான் பெண்கல்வி இப்டி முன்னேரினத்துக்கு காரணமாமாம். இதுல கெடைச்ச ஆத்மதிருப்தியப் பாத்து நெறைய பேர் ஜாயின் ஆகிட்டாங்க. நம்ம பள்ளிக்கூடம் வேற சங்கர வித்யாலயா மாதிரி 'சுயவுதவிக்குழு' திட்டத்தில் நம்பிக்கையில்லாத பள்ளியா, அதால ஒரே இம்சை. கெமிஸ்ட்ரி, கம்ப்யூட்டர் சயின்ஸை தவிர மத்ததோட மதிப்பெண்னெல்லாம், கண்முன்னாடி வந்து மதியில்லா பெண்ணேன்னு டான்சாடுது.
நுழைவுத் தேர்விலையும் கெமிஸ்ட்ரி தவிர மத்த ரெண்டும் கூஊஊஊஊதான். இதுக்குக் கோச்சிங் கிளாஸ் வேற. அதுக்கு போறப்போல்லாம் தேவயானி எப்டி எகிறி குதிச்சு போய் கல்யாணம் பண்ணினாங்க, பிசிக்சுக்கு வர்றவர் குத்தாலச் சாரலை விரும்புபவரா, கொத்தவரங்காவுக்கு தம்பியா அப்டின்னு அப்போதைய ஹாட் டாபிக்ஸ் பத்தி தனியே ஒரு பொது அறிவு வளர்ச்சி கோச்சிங் வகுப்பு நடக்கும்.
இப்டியாப்பட்ட நிலமையில...............................
கிலோ என்ன விலை?
பொதுவா, ஸ்டேட்போர்ட் சிலபஸ் எங்க வீட்ல எல்லாருக்கும் பிடிக்கும்னாலும் துரதிஷ்டவசமா எங்க வீட்டுப்பக்கத்தில் அப்போ தனியார் மற்றும் அரசு பள்ளிகள் இல்லாததால, நான் மெட்ரிக்ல சேர்ந்தேன். அதோட எங்கம்மா வேற தான் பியூசில பிராக்டிகல்ஸ்ல தனிச்சு விடப்பட்டதால ஸ்டேட்போர்டு வேணாம்னுட்டாங்க. அதிருக்கட்டும், ஆனா இன்னிவரை ஒருவேளை அதுல படிச்சிருந்தா நான் அடிப்படைகளில் இன்னும் வலுவா பலப் பாடங்களில் இருந்திருப்பேனோன்னு தோணும். இங்க நான் வெறும் அரசு மற்றும் அரசு உதவிப்பெறும் பள்ளிகளை பத்தி தெரிஞ்சதை முதல்ல எழுதறேன்.
எங்கப்பா சென்னையில் இருக்கிற ஒரு பிரபலமான அரசு உதவிப்பெறும் பள்ளியில் வேலைப்பார்த்தவர். சென்னையோட வியாபார மற்றும் பொருளாதார இதயம்னு சொல்லலாம். எந்த ஏரியாவில் எந்த நகைக்கட, துணிக்கடை, உணவகம் அது இதுன்னு போனாலும் எங்க வீட்ல எல்லாருக்கும் சிறப்பு கவனிப்பு கொடுக்கறாப்போல குறைந்தபட்சம் அந்த பள்ளி மாணவர் ஒருத்தராவது இருப்பார். இன்னும் சொல்லனும்னா, ஷங்கர்ல ஆரம்பிச்சி, அஜீத் விஜய்னு ரெண்டுபேரையும் வெச்சி உலகமகா தொம்மைப்படமெடுத்த சவுந்தர்லருந்து, நம்ம பவர் பாண்டியன் வரை எல்லாரும் அந்தப் பள்ளிக்கூடத்தோட முத்துக்கள்தான். இந்தப் பள்ளிக்கூடம் இப்போ ஓரளவுக்கு அதோட கரஸ்பாண்டென்டால ஒகேவாகிக்கிட்டிருக்குன்னாலும் மத்த பல பள்ளிகளோட நிலைமை இப்டி இருக்கறதால இதை உதாரணமா வெச்சிப்போம். எல்லாப் பள்ளிக்கும் தெய்வநாயகங்கள் பிறந்து வர்றதில்லையே.
மேலே குறிப்பிட்டவங்கல்லாம் எங்கப்பாவை மரியாதையா ஐயாங்கும்போது ஜாலியாயிருக்கிற எனக்கு, அதேப்பள்ளியோட (அதாவது 1992-2002 காலகட்ட)ஜூனியர்மாணவர்கள் மட்டும், வினோதமா ஜயான்னு விளிக்கும்போது கடுப்பாகிடும். இவங்க இப்டி எழுதனும்னு அவங்களுக்கொன்னும் வேண்டுதல் இல்ல. அந்தளவுல அவங்களோட பள்ளியில் கல்வியின் தரம் இருக்குன்னு அப்புறம்தான் புரிஞ்சது.
அப்போல்லாம் அப்பா திருத்த வீட்டுக்கு கொண்டுவர்ற பேப்பர்கள எடுத்துப் படிச்சுப்பாத்து சிரிக்கிறது எனக்கும் எங்கக்காவுக்கும் பெரிய பொழுதுபோக்கு. அப்பா ஸ்கூலுக்கு போனா, பிரேக் சமயத்துல வேணும்னே பெரிய கிளாஸ் பசங்க கிட்ட போய் நக்கல் விடறதுன்னு டார்ச்சர் பண்ணிக்கிட்டு இருக்கறதுதான் பொதுவாழ்வுன்னு இருப்பேன். அவங்க பொதுவா ராவிடுவாங்கன்னாலும், தவ்ளூண்டுக்கிட்ட என்னாத்தப் பேசறதுன்னு விட்டிருவாங்க. டீல எச்சத் துப்பித்தர்றத்துக்கு நான் அப்ப டீயும் குடிக்கமாட்டேன்:):):)
இப்டியாக அப்பா கண்ல படாம நிம்மதியா ஓடிக்கிட்டிருந்த பொதுவாழ்க்கை, ஒரு நாள் பட்டு, பட்டுட்டேன் அறிவுரைகளால.
இத்தனைக்கும் இந்த பள்ளியோட ஆசிரியர்கள் தனியார் பள்ளி ஆசிரியர்கள விட பசங்கக்கிட்ட நெருக்கமா இருப்பாங்க. பசங்கக் கிட்ட டீ வாங்கி வர சொல்றது உண்மைதான்னாலும், அதே பசங்களுக்கு வீட்ல கஷ்டம்னா தானே எக்சாம் பீஸ்லருந்து எல்லாத்தையும் அலட்டாம கட்டிருவாங்க. வருஷாவருஷம் பள்ளி மாணவர்களுக்கு தாங்களே காசைப்போட்டு சரவணபவன்லருந்து விருந்து ஏற்பாடு பண்ணிடுவாங்க. பசங்களுக்கு ஒண்ணுன்னா, ஹைகோர்ட் வக்கீல்களாட்டம் அப்டியே பொங்கி எழுவாங்க. எல்லாம் சரிதான், ஆனா அவங்களாட்டமே (நான் சொல்ற காலக்கட்டத்துல) தங்களோட இன்னொரு முக்கிய கடமையான கல்விப்புகட்டுதலை மறந்துட்டாங்க.
ரெண்டாங்கிலாசு படிச்சிட்டிருந்த நானு எட்டாங்கிலாசு ஒம்பதாங்கிலாசு பசங்க பேப்பரை படிச்சு கேலிப்பண்ற ரேஞ்சில இருந்திச்சுன்னா எப்டி? நான் கொழுப்பெடுத்து பண்ண வேலையாவே இருக்கட்டும், அவங்கள்ள பலர் அசாதாரண சூழல்ல படிக்கிறாங்கன்னே இருக்கட்டும், சரவணா ஸ்டோர்ஸ் குலக்கொழுந்துகள் கஜக்கர்ன சூர்ணமாகவே இருக்கட்டும், அதுக்காக அந்தளவுலையா வெச்சிருக்கறது?
இது எதுவும் புதுமையான சூழல் கெடயாதே. முன்னையும் இதே சூழல்ல இருக்கத்தானே செஞ்சாங்க? அப்போ இதே பள்ளில நல்ல வசதியான குடும்பத்து பசங்களும், முக்காவாசி ஆசிரியர்களோட பிள்ளைகளும் படிச்சதால ஒழுங்கா நடத்த முடிஞ்சதுன்னா, அப்புறம் இப்போ மட்டும் ஏன் முடியல?என்னத்த பெருசா நகரங்கள்ல கல்வி வாழுது?
அதெப்படி போதுமான ஆசிரியர் நியமனங்கள ஒரு குறிப்பிட்ட கட்சி ஆட்சிக்கு வரும்போதெல்லாம் நிறுத்தி வெச்சு, கிட்டத்தட்ட ஒரு மாணவனோட வாழ்க்கையயே கேள்விக்குறியாக்குதுன்னு தெரிஞ்சும் யாரும் பெரிய பிரச்சினை ஆக்க மாட்டேங்குறாங்க? இது சம்பந்தமா பொதுநல வழக்கு போட்டாலும் ஏன் மீடியாவுல இன்னும் பெருசுப்படுத்த மாட்டேங்குறாங்க?
பெரிய நகரமும் இல்லாத, கிராமமும் இல்லாத எங்க ஊர்ல இருக்குற அரசுப் பள்ளியின் நிலையும் இதுதான், அந்த ஆசிரியர்களோட பிள்ளைகள் அங்க படிச்சிட்டிருந்த வரைக்கும் அவ்ளோ நல்லா நடந்திட்டு இருந்துச்சி, இப்போ அதுலயும் நிலைமை மோசம்தான். எனக்கு இந்த ஆசிரியர்களோட அக்கறையே புரியறதில்ல. ஏதோ ஒரு பிராடு வாத்தி, ஒரு பத்தாங்கிளாசு பொண்ணு கணக்கு பேப்பர் ரீகவுண்டிங்க்ல வேலையக் காமிச்சத்தை மெனக்கெட்டு, பாடுபட்டு அந்தப் பொண்ணு வீட்டுக்கு தெரியப்படுத்தறவங்க, பையன் ரெண்டுநாள் பள்ளிக்கு வரலைன்னா வீட்டுக்கே போய் என்னா எதுன்னு பாக்குறவங்க ஏன் நார்மலான விஷயமான பயிற்றுவித்தலை செம்மையா செய்றத்துக்கு விசனப்படறாங்க? அறிவியல், கணக்கு ஆசிரியர்கள் முக்காவாசிப்பேர் எதுக்கு தனியா ட்யூஷன் சென்டர் ஆரம்பிக்கறாங்க? இவங்கல்லாம் அரசு ஊழியர்கள்தான?
சரி, இவங்கள விட்டுட்டு மெட்ரிக்குலேஷன் பாடத்திட்ட பள்ளிகள் பக்கம் வந்தா, பெரும்பான்மையா அங்கயும் நிலைமை தூன்னு துப்பற அளவுலதான் இருக்கு. விரல்விட்டு எண்ணக்கூடிய மிகப் பிரபலமான பள்ளிகளைத்தவிர மத்ததெல்லாம் மோசம்தான். அங்கெல்லாம் புத்திசாலின்னா, என்னோட மறுபதிப்புகள்தான் ஏராளம். மக்கடிச்சு மார்க்கெடுக்கணும் அவ்ளவுதான். புரிஞ்சு படிச்சதா சரித்திரமே இல்ல. போனதரம் கூட சிலப்பேர் கேட்டிருந்தாங்க எப்டி ஆர்கானிக் கெமிஸ்ட்ரி மக்கடிச்சேன்னு, பத்தாங்கிலாசு வரை நான் ஒரு பாடம் விடாம எல்லாத்தையும் அப்டித்தான் படிச்சேன். வேறவழியில்ல, சொல்லிக்கொடுக்க ஆளில்ல, ஆனா நல்ல மார்கெடுத்து பாசாகணும்னு நெருக்கடி பிளஸ் ஒருவித காம்பிளக்ஸ் இருந்தா எதையும் மக்கடிக்கலாம்.
மெட்ரிக்குலேஷன் பள்ளிக்கு அனுப்பலைன்னா குடும்பத்துல தள்ளி வெச்சிடுவாங்கன்னு அனுப்பறவங்கக் கூட, ட்யூஷனுக்கு ஏன் அரசு பள்ளி ஆசிரியருக்கு முன்னுரிமை கொடுக்கறாங்க? அதுக்கும் அந்த மெட்ரிக்குலேஷன் ஸ்கூல் டீச்சர்கிட்டயே அனுப்ப வேண்டியதுதான? அனுப்பமாட்டாங்க, ஏன்னா, அங்க இருக்குறவங்க முக்காவாசி அனுபவமும் விஷயஞானமும் இல்லாதவங்களா இருக்காங்க, இல்லைன்னா, இன்னும் ஒருபடி மேல போய் அங்க பிசிக்ஸ் மேத்சுக்கெல்லாம் டீச்சரே இருக்க மாட்டாங்க, வேறொரு ஏற்பாட்டில் ஸ்கூல் நடக்கும். இதெல்லாம் தெரிஞ்சும் கேக்கமாட்டாங்க. ஏன்னா அங்க கொட்டிக் கொடுக்க பிறவி எடுத்தவங்களாச்சே எல்லாரும்.
இந்த நிலை அங்க வர காரணம் என்ன, ஒன்னு புற்றீசல் போல பலது தொறந்தது, இன்னொன்னு பசங்கக்கிட்ட கொள்ளையடிச்சு பில்டிங்கா ஏத்திக்கிட்டு போறது, வாகனங்களா வாங்கிக் குவிக்கிறது, ஆனா ஆசிரியர்களுக்கு அதுலருந்து கிள்ளிக் கொடுக்கக் கூட மனசு வராது. என்னதான் காலக் கொடுமைன்னு வந்தாலும், கடைநிலை ஊழியரோட பொண்ணும் பையனும், அவர் வாங்குற சம்பளத்தையே டீச்சரா போய் வாங்கினா அவரு 'ஆஹா இதல்லவோ சமத்துவம்னு சந்தோஷமாப் படுவாரு?'. ஒரு காலத்துல மெட்ரிக் ஸ்கூல்ல வேலப்பாக்குறது பெரிய அதிகாரிகளோட கான்வென்ட் எஜுக்கேட்டட் மனைவிகளுக்கு பெருமையா இருந்துச்சி, இப்போ அப்டியா இருக்கு நிலைமை? ஐடி செக்டர்லையும் கால்செண்டர்லையும் இவங்க போக ஆரம்பிச்சப்புறம் மெட்ரிக் பள்ளிகள் பாடு இன்னும் திண்டாட்டமாச்சு. அப்பவும்கூட திருட்டுத்தனமா பிசிக்ஸ் டீச்சருக்கு தனியா கணக்குல இல்லாம சம்பளம் தருவாங்களே தவிர கொஞ்சம் கூட மனசாட்சிப்படி நடந்துக்க மாட்டாங்க.
ஜனவரி பிப்ரவரி மாதங்களில், மானங்கெட்டத்தனமா கல்வியதிகாரிக்கிட்ட ஏன் முக்காவாசி (எக்சாம் சென்டராக இருக்கும் பட்சத்தில்)மெட்ரிக்குலேஷன் பள்ளி முதல்வர்கள், நிர்வாகிகள் எல்லாம் திட்டு வாங்கறாங்க? (கல்வியதிகாரிகள் மட்டும் குறைச்சலா என்ன, வருஷம் பூரா உப்பைத்தின்னுட்டு இருந்தா கடசீல செண்டர்னு வரும்போது தண்ணிக்குடிச்சித்தான ஆகணும். இன்னும் பாதிப்பேர் பதவிய உபயோகப்படுத்தி, பெரிய பள்ளிகளில் பையனுக்கும் பேரனுக்கும் சீட் வாங்குறத்துக்கு காட்ற ஆற்றலை மத்ததுலையும் கொஞ்சூண்டு காமிச்சாலே போதும்). எப்டி உங்க பள்ளிகளில் சீட்டிங் அரேஞ்ச்மென்ட் போடறீங்கன்னு கேட்டா பதில் சொல்ல முடியுமா எல்லாராலையும்?
அந்த மெட்ரிக் போர்டுல இருக்குறவங்களோட மிக நெருக்கமானவங்களே பள்ளிகள் நடத்துனா, நூத்துக்கு நூறு பர்சென்ட்னு பக்கம் பக்கமா பேப்பர் விளம்பரம் கொடுக்கறதுல என்னா அதிசயம்? ஏன் , நெறைய மாநிலங்களில் நம்ம மெட்ரிக் பிராக்டிகல்ஸ் மார்க் பத்தி கிண்டல் பண்ணி பேப்பர்ல ஆர்ட்டிகல் வரும்போது மட்டும் பம்முறாங்க?ஸ்டேட் போர்டுல படிக்கிறவங்களுக்கு பிராக்டிகல்ஸ் கிடையாது, அவங்க புதுசா உயர்நிலைப்பள்ளில கத்துக்கலாம், மெட்ரிக் பசங்களும் அதே கான்கேவ் லென்சை ஏன் புதுசா பாக்குறாங்க?
படிப்புலதான் இப்டின்னா, இதுல எந்த விதத்திலும் பசங்க யோசிக்கிறத்துக்கு, கிரியேட்டிவிட்டிய வளக்கறத்துக்கு வழிவகை உண்டா இந்த பள்ளித்திட்டத்தில்? இந்த பள்ளித்திட்டத்தை தூக்கினாலே தானா தனியார் பள்ளி நிறுவனங்களோட நிலைமை கேவலமா போய், அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளோட நிலைமை ஒசந்திடும்.
ஐசிஎஸ்சி பாடத்திட்டத்தில் இயங்குகிற பள்ளிகள் மட்டும் எப்டி இன்ட்ரஸ்டிங்கா பள்ளியை நடத்துறாங்க? இதுலயும் செயல்வழிக் கல்விதான் ஆரம்பக் கல்வி அப்டிங்கும்போது, அங்க மட்டும் சரிப்படற ஒரு விஷயம் மத்த பாடத்திட்ட பள்ளிகளில் மட்டும் ஒத்துவராதத்துக்கு மாணவர் எண்ணிக்கை மற்றும் ஆசிரியர் பற்றாக்குறை மட்டும் காரணமா, இல்ல, நல்ல ஒரு முயற்சியை வேணும்னே ஒதுக்கனுங்கற மனநிலையா? அங்கருந்து வர்ற பசங்க எப்டி எல்லா பாடங்கள்ளையும் பலமான அஸ்திவாரத்தோட வர்றாங்க? அங்கருந்து வர்ற பசங்க பெரியளவுல படிப்புல கெட்டிக்காரர்களா இல்லைன்னா கூட எல்லாத்தோட அடிப்படையும் புரிஞ்சி, தானா யோசிக்கிற திறன் ஜாஸ்தி உள்ளவங்களா இருக்கறாங்களே அதெப்படி? காலங்காலமா வசதியான, மேல்தட்டு குழந்தைகள் பெரும்பான்மையாக படிக்கிறதால இப்டியா?
சிபிஎஸ்சி பாடத்திட்டம் நம்மூர்ல கையாளப்பட்ட விதமே வேறங்கறதால அதுப்பத்தி சொல்றத்துக்கு ஒண்ணுமில்ல.
Happy Earth Day :(:(:(
வாரணம் ஆயிரம் பார்ட் 2 / மரியாதை
வாரணம் ஆயிரம் படத்தையே கொஞ்சம் நம்புற மாதிரி, வசனத்தை தமிழ்ல வெச்சு, காப்பியடிக்கவே அவசியமில்லாத கண்றாவியான பாட்டுகளோட, (வாரணம் ஆயிரம்)படத்தோட டைரடக்கரே படத்துக்கு வில்லனான மாதிரியில்லாம, (ஆனா கவுதம மாதிரியே) சப்பையான வில்லன் கேரக்டர வெச்சு என்னமா எடுத்திருக்காங்க, பேருக்கேத்தாப்ல இப்டியொரு மரியாதையான படத்தை மானங்கெட்ட படம்னெல்லாம் திட்டறது சரியில்லைங்கறேன்.
அதுல எப்டி அப்பா சூர்யா, புள்ள சூர்யாவை தன் போக்குல விட்டு வளத்து, தீவிரவியாதிகளயெல்லாம் கொன்னு ஒசாமா பின் லேடனுக்கே சவால் விட்டிருவாரோன்னு யோசனை பண்ண வெச்சாப்ல, இதுலயும் gaptain தன் புள்ளைய சூட்டிகையா வளத்து , சொத்தை தாரவாக்க வெச்சு, ஊர் பணத்துல கிரீன் ஹவுஸ் அமைச்சு, பத்து லச்சம் வெச்சிருக்கவங்கல்லாம் பசுமைப் புரட்சியப் பண்ணனும்னு கருத்து சொல்றார்.
என்னத்த பெருசா சூர்யா சிக்ஸ் பேக் வெச்சுட்டாரு, ஸ்கூல் பேக் தூக்கிட்டாருன்னு பீத்தறாங்க, இதுல பாருங்க நம்ம gaptainனோட ரெண்டு கன்னத்துலருந்தும் தொங்குற சதையயே, பசங்க ஆலமர விழுதுக்குப் பதிலா இழுத்து புடிச்சு தொங்கி வெள்ளாடலாம். நாங்க சின்ன வயசுல கோதுமை மாவை உருண்டையாக்கி கூரை மேல அடிச்சு, அது கொஞ்சம் கொஞ்சமா தொங்கி கீழே விழுறதைப் பாத்து அதிசயப்பட்டு கூத்தடிப்போம். இந்தப் படத்துல குறிப்பிட்டு சொல்ற அம்சமா, இவரு கன்ன சதை கூரைலருந்து விழுற மாவுருண்டயாட்டமே இருக்குறது சூப்பரா இருக்கு.
என்னமோ மாசக் கணக்கா பட்டினிக் கெடந்தாராம் சூர்யா, அப்பா புள்ளன்னு வித்தியாசம் காட்டறத்துக்கு. இதுல gaptain தன் மீசை அடர்த்திய வெச்சும், வாய்ஸ் மாடுலேஷன வெச்சும் ஒரு வித்தியாசத்தைக் காட்டிருக்கார் பாருங்க யப்பா !!!
ஹீரோவுக்கும் ஹீரோயினுக்கும் எந்தவித ஏற்றத்தாழ்வும் காட்டக்கூடாதுன்னு பிரம்மப் பிரயத்தனப்பட்டு, மீரா ஜாஸ்மின், மீனாவயெல்லாம் தன்னை விட ஜாஸ்தி புஜப்பலப் பராக்கிரமத்தோட காட்டிருக்கார். நாய கல்லால அடிச்சுக் கொல்னும்னா, அதுக்கு வெறி பிடிச்சிருச்சின்னு சொல்வாங்கல்ல, அதுமாதிரி விக்ரமன் படத்துல அட்டு ஹீரோவ, உதாசீனப்படுத்தி கிளைமேக்ஸ்ல திருந்துற ரோலை ஒரு மார்க்கெட் போன ஹீரோயின் செஞ்சா, அதுதான் அவங்க கலைச்சேவைக்கு சங்குன்னு பிரியா ராமன், வினிதா வரிசையில் மீனா உறுதிப்படுத்திருக்காங்க.
அதுல அஞ்சல பாட்டுக்கு என்னாத்துக்கு அவ்ளோ நல்ல பேருன்னு புர்ல. இந்தப் படத்துல மீனாப் பாடறப்போ ஆடறதாகட்டும், அப்புறம் மீரா ஜாஸ்மினோட டூயட்டாகட்டும் ஸ்பாஅஆ , கடவுள் நம்பிக்கை இல்லாதவங்களுக்கு கடவுள் நம்பிக்கையும், விஞ்ஞானத்தை நம்பாதவங்களுக்கு விஞ்ஞானத்துலையும் நம்பிக்கைப் பொங்கும்.
அதுல எப்டி ஒரே பாட்டுல சூர்யா, பிரெண்டோட புராஜக்டை வெச்சு, பணம் சம்பாதிச்சு, கடன் தீர்த்து, வீட்டைக் கட்டி, பாட்டுப் பாடி காம்படிஷனும் ஜெயிச்சு, அமெரிக்கா போறாரோ, அதுப் போலவே இதுலயும் gaptain செய்றார். என்ன, கவுதமால இங்கிலிபீசுல தான் சிந்திக்க முடியும், சனியன் புடிச்ச தமிழ்ல ஒன்னியும் வெளிப்படுத்த முடியாததுனால அதை தம்மாத்தூண்டுக் கூட என்னாதுன்னு சொல்லலை. இதுல அகிலாண்ட நாயகனுக்குப் போட்டியா, இனிவரும் காலங்களில், gaptain டப் பைட் கொடுக்கணும்னு, திட்டத்தையும், அதுக்கான முதலீடு கெடச்ச விதத்தையும் வெளக்குமாறால வெளுத்தெடுக்குற மாதிரி வெளக்குறாங்க.
நம்மள பதைபதைக்க வெக்குற திருப்புமுனயானக் கதாப்பாத்திரத்துல குண்டான் கணக்கா மெரட்டிருக்காங்க மீனா. மீரா ஜாஸ்மின் இந்தப் படத்துக்கப்புறம், சமீபத்துல நடிக்க வந்திருக்க அவங்க அக்காவுக்கு செமப் போட்டியா இருப்பாங்கன்னு நெனைக்கிறேன். இப்டி வித்தியாசமா தேர்ந்தெடுத்து நடிச்சாதான் அம்பிகாவாட்டம் சீக்கிரம் ஆக முடியும்.
அதுல சூர்யா காதலை சென்னைலையும் அமெரிக்காலயும் வெளிப்படுத்தின விதத்தைப் போய், க்யூட்டா இருக்கு அது இதுன்னு, இஷ்டத்துக்கு அள்ளிவிட்டவங்க, இதுல ராஜ் டிவிக்கே போய் gaptain துறுதுறுன்னு துருப்பிடிச்ச இரும்புக் கணக்கா காதலை வெளிப்படுத்தறார் பாருங்க.
டைரெக்டர் விக்ரமன், காலேஜ்ல தலைவாசல் விஜயோட சீனியர்னு நெனைக்கிறேன். ஆனா இந்தப் படத்துக்கப்புறமாவது விஜயை ராகிங் பண்றதை விக்ரமன் நிறுத்திடனும்.
மீனா - சம்பத் நிச்சயத்தை gaptain நிறுத்துற காட்சியில இருக்க லாஜிக் இருக்கே, தெய்வமேன்னு கதறனும் போலிருக்கும். அதுல சூர்யா நெனச்சவுடன் ஆர்மில சேர்ந்து அப்டியே உயர உயரப் போகுற லாஜிக்குக்கே போட்டி.
படத்துல வர்ற காதல் காட்சிகள், ரமேஷ் கண்ணாவின் காட்சிகளுக்குக் கடும் சவால். ஒரு சொலவடை இருக்குல்ல, சீப்பை ஒளிச்சு வெச்சிட்டா கல்யாணம் நின்னிடுமான்னு, ஆனா எனக்கொரு தீவிர சந்தேகம். குமுதம், விகடன் மாதிரியான பத்திரிக்கைகள்ல இருக்கிற ஜோக்கெல்லாம் திடீர்னு மறைஞ்சிட்டா, விக்ரமன் படமெடுக்கிறதயே நிறுத்திடுவாரோன்னு.
இன்பம், துன்பம், விருப்பு, வெறுப்பு, கோவம், அதிர்ச்சி, காதல்/நகைச்சுவைன்னு எந்த நிலையிலையும் தன் உணர்ச்சியைக் காட்டிக்காம, காசியில மப்புல திரிவாங்களாமே ஞானிங்க, அது மாதிரியே, ஒரே வித முகபாவத்தோட எல்லா சவால்களையும் சந்திக்கிற gaptain முத்தலமைச்சரானா, நமக்கெல்லாம் எம்புட்டு பெரிய விடிவுகாலம் மற்றும் அதிர்ஷ்டம் பாருங்க.
இவ்ளோத்துக்கப்புறம் இதையும் forrest gump தழுவல்னு மானசாட்சயில்லாம பொரளிக் கெளப்புனாக்கா, ஒன்னு tom hanks லெட்டரெழுதி வெச்சிட்டு தூக்கு மாட்டிப்பாராம், இல்லைன்னா Angels & Demons படத்துக்கு ரிலீசப்போ அண்டசராசர நாயகன் டி.ஆரோடவும் அவர் புள்ளயோடவும் பாக்கறத்துக்கு டிக்கட் ரிசர்வ் பண்ணிடுவாராம். இதை வாரணம் ஆயிரத்தை தன் படத்தோட தழுவல்னு சொன்னதக் கேட்டு கொலவெறியோட திரியுற forrest gump பட இயக்குனர் சொன்னதா சமீபத்துல என்டிடிவில சொன்னாங்க(இப்போல்லாம் நாம அவங்க சொல்ற கேனத்தனமான செய்திகளத்தானப் பாத்து தான புளகாங்கிதப்படுறோம்).
கோட்டானுக்குக் கோட்டயக் கொடுத்தவனும், பாட்டனுக்குக் கடல பர்பியக் கொடுத்தவனும்
பொதுவா அஜீத் விஜய், சிம்பு படங்கள கொஞ்சூண்டு பாத்தாலே, விஜயகாந்த் படத்துல, அவரு வல்லவரு நல்லவரு வடிக்கட்டுன (உத்த)மருன்னு நாலஞ்சு சீரியல் ஆர்ட்டிஸ்டை விட்டு பேச வெச்சு டிராஜடியையும் காமடியாக்குவாங்கள்ல, அதுல சீரியல் ஆர்ட்டிஸ்டுக்கு பதிலா இவங்களப் போட்டு டிராஜடி சீனை, கிரைம் இல்லைன்னா சயன்ஸ் பிக்ஷன் ஆக்கனும்னு தோணும். அதையே இப்போ சன் பிக்சர்ஸ் இன்னொரு விதத்துல பண்ணிக்கிட்டு இருக்கு. சீக்கிரமே மணிரத்தினம், ராஜீவ் மேனன், கவுதம் மேனன் மாதிரியாப்பட்ட டாபர் பாய்சயெல்லாம், புத்தம் புதுசாக் கெளம்பி, தான் ஹீரோவா நடிச்ச படத்தால கானகத்த கிடுகிடுக்க வெச்ச டாக்டர். இராமோடப் புதுப் படங்களைப் பத்தி பாராட்டி பேச வெக்கனும்னு அழகிரி அண்ணனை அடம்பிடிக்க சொல்லணும்.
2) இனிமேட்டு நான் ஷாப்பிங் போக மாட்டேன்.
பிரியாணியேத் திங்க மாட்டேன்.
எங்கயும் பராக்குப் பாக்க மாட்டேன்.
தப்புதப்பா போட்டோ எடுத்துட்டு, பாலுமகேந்திராவே சொல்லிருக்கார், மனித முகம் இல்லாதப் புகைப்படம் மண்ணுக்கு சமம்னு, அதாலத்தான் வானவில்லை விட்டுட்டு, பக்கத்துல நிக்கிற தாத்தாவ படம் புடிச்சேன்னு சொல்லமாட்டேன்.
பீட்சாவுக்கு மாவை அரமணிநேரத்துக்கு முன்ன பெசஞ்சிட்டு, ஹ்யுமிடிட்டி பத்தலைன்னு ஏதாச்சும் பேத்த மாட்டேன்.
தமிழ் பண்பாடு, ஹிந்து, கலாச்சாரம் அப்டி இப்டின்னு இஷ்டத்துக்கு புருடா விடாம, போர்க் பிடிக்காது, அதால சாப்டமாட்டேன்னு இங்கிருக்க நண்பர்கள்கிட்ட உண்மையச்சொல்வேன்.
தமிழைத் தமிழா எழுதுவேன்.
கடைக்குப் போனா பிரெஞ்சுத் தெரியாத டூரிஸ்ட் மாதிரியே சீன் போட்டு கடக்காரங்கள சாவடிக்க மாட்டேன்.
அம்மா தேர்தல்ல ஜெயிச்சா என்னென்னமோ வாங்கித் தருவேன்னு சொன்னதை நம்புறவங்க, மேலே சொன்னதையும் நம்பிடனும்.
3)ஆண்டவா, பன்னிக் காய்ச்சல்லருந்து(ஒன்னுக்குள்ள ஒன்னுதான) கூடக் காப்பாத்த வேணாம், ஆனா இந்த நசுங்கின கொசுக்களோட இம்சைலருந்து ஜாமீனாவது வாங்கிக் கொடுன்னு கதறனும் போலருக்கே.
இந்தத் தமிழ்'குடி'தாங்கி ஐ(ஜ)யா தொல்லையத் தாங்க முடியல. இத்தன நாளா தயாநிதி, கலாநிதியப் பாத்து பொதுமக்களுக்கு பாதகமில்லாமப் பொறாமையில பொசுங்கிக்கிட்டுக் கெடந்தாரு. இப்ப என்னடான்னா, முழுசா வேகறத்துக்கு முன்னயே குதிச்சு வந்துட்டு, ஸப்பாஆஆ........
தயாநிதி காப்பி வித்த அனுவோட நிகழ்ச்சியில வந்தா, இவரு போட்டிக்கு புள்ளயாண்டான் கண்ணாலம் கட்டினக் கதைல குடும்பத்தை கோத்துவுடறார். அன்புமணி தனக்கு பால விவாகம் நடந்துட்டதா பொலம்பினது காலக் கொடுமைன்னா, பேட்டி முழுக்க தான் பேசுனதுல தானே டபுள் மீனிங் கண்டுப்பிடிச்சி அதத் திருத்துனதுதான், கொடும இன்பினிட்டி. இதுவரைக்கும் மத்தவங்களைத்தான் இப்டில்லாம் பேசுவாங்க, அப்புறம் எங்கப் புரியாமப் போய்டுமோன்னு திருத்துறாப்டி இன்னும் தெளிவாக்குவாங்க, ஆனா இவரு தன் குடும்பத்துக்கே இப்டி ஆப்படிக்கிறாரே.
4)பொதுவாவே பாராளுமன்றத் தேர்தல்னா, இந்தத் தொழிலதிபருங்க தொல்லையத் தாங்க முடியாது. இந்தவாட்டியும் ஆரூண்லருந்து, சரத்பாபு வரைக்கும் இந்தியாவ வல்லரசாக்குறக் க்யூ நீண்டுக்கிட்டே போகுது. எப்டியோ தமிழ்நாட்ல 'லாட்ரி' அடிக்காம இருந்தா சரி. ஒருவகைல இவங்களையும் பாராட்டனும், தேர்தல் மூலமா பாராளுமன்றம் போக முயற்சி பண்றாங்களே.
5)பழைய தூர்தர்ஷன் நாட்களை எண்ணி ஏக்கம் கொள்பவர்கள், அந்த ஏக்கமே முத்தி, செவ்வாய்க்கிழமை நாடகத்தைக் கூட சிலாகிக்கிறவங்களுக்கு ஒரு நற்செய்தி. ஆஸ்கார் பிலிம்ஸ் சார்பில், காந்தி கிருஷ்ணா இயக்கத்தில் இரண்டரை மணிநேர தூர்தர்ஷன் ஸ்பெஷல் செவ்வாய்க்கிழமை நாடகம் சென்ற மாதம் வெளியிடப்பட்டுள்ளது. நாடகத்தின் பெயர், ஆனந்தத் தாண்டவம். சுஜாதா என்ற எழுத்தாளரை பலதரப்பட்ட சினிமாக் கலைஞர்கள் கூட்டாக இயங்கி பழி தீர்க்கும் கதை.
பொது அறிவுத் தகவல்கள்
2) நம்ம வக்கீலுங்கத் தொரத்தி தொரத்தி ஒதைச்சும், இந்த என்டிடிவிக்காரங்களுக்கு நக்கலு கொறயல. நமக்கும் வேணும், செரங்குப் பிடிச்ச கொரங்குக்கு சீப்பால வைத்தியம் பாத்தாப்ல, அவங்க கம்முன்னு அம்பானி, டாட்டா மாதிரி தேசத்தந்தைகளுக்கு இந்த நாடு என்ன செஞ்சிருக்குன்னு அக்கறையா, ஆதங்கமா செய்திகளைப் போட்டுக்கிட்டு இருக்கும்போது, 'நீ ஏன் அத்த காட்ல, நீ ஏன் இத்தக் கிழிக்கலன்னு' கொரலு விட்டுக்கிட்டிருந்தோம், இப்ப என்னடான்னா, அவங்க 'இன்னைக்கு செத்தா நாளைக்குப் பாலாம்ல'ன்னு சீதை கணவருக்குப் போட்டியா கடுப்பேத்துறாங்க. பேசாம, நான் அடுத்த பிளைட்ல வந்து, ஒரு நிகழ்ச்சியில கலந்துக்கிட்டு சாவடிச்சாத்தான் சரியா வரும்போல.
வடஇந்திய மீடியாக்காரங்கதான், டக்கின் பண்ண டாபர்னு தெரியும்ல, அப்புறம் என்னாத்துக்கு, இவங்கெல்லாம் அங்கப்போய் விவாதத்துல பங்கேற்குறாங்க. என்னைய மாதிரி வெட்டியானவங்கதான் அங்க போய் உக்காந்து சாம்பார் செய்யும் ரெசிப்பியை கத்துக்கிட்டோம்னா, இவங்களுமா? இட ஒதுக்கீடுலருந்து எல்லாத்துலயும் ஒரு முன்முடிவோட வந்து ஒக்காந்துக்கிட்டு, அம்பேத்கரே வந்தாலும் மைக்கால மூக்கை ஒடைக்கப் பாக்குறவங்களாச்சே, தெரிஞ்சுமா போகணும்?
விவாதத்துலப் பங்கேற்க கே.எஸ்.இராதாகிருஷ்ணன் மாதிரி ஆட்கள் இல்லைன்னா, போகாம இருக்கிறது நல்லது.
சரி போறவங்களாவது இனிமேட்டெல்லாம், இந்த அண்டப்புளுகு ஆகாசப்புளுகு கோச்சிங்குக்கு கோவப்படாமப் பேச டோப்படிச்சிட்டு போனாத்தான் உண்டுன்னு பொது அறிவோட இருக்காங்களான்னா, அதுவும் இல்லை.
பப்பு யாதவ் கிட்டப் போய் பம்மிப்பதுங்கி ஹிந்தில பேசுறது, ஆனா, நம்மூர்ல கொஞ்சூண்டு ஆங்கிலப் புலமை கொறஞ்சாப்டி தெரிஞ்சிச்சுன்னா அவங்கள ஓட்டுறது.
ஜெயந்தி நடராஜன் கிட்ட ஒரு சந்தேகம் கேக்கணும், 'நீங்க கடைசியா ஒருத்தர்கிட்ட சொன்ன அதே வரியை வடக்குல யார்கிட்டயாவது சொல்வீங்களாமா'ன்னு?
இந்தத் 'தாய் மண்ணே வணக்கம்' கோஷ்டிங்க இம்சை வேற இந்த விவாதங்கள்ல தாங்க முடியல, என் சமையல நானே சாப்டறத விடக் கொடுமையா இருக்கு.
விவாத நாயகர்களில், ரெண்டு மூணு பேர் டார்ச்சராகி,'நீ இங்க சொகமா ஒக்காந்திட்டு பேசக்கூடாதுன்னு' சொல்றது தேவையில்லாததுன்னு தோனுது. களத்துல இருக்கவங்களத் தவிர மத்தவங்கல்லாம் அக்கறைப்பட்டாலும் சொகமாத்தான இருக்கோம்.
3) நம்மூர்ல சன் டிவி, கலைஞர் டிவிக்கே காண்டாவுறவங்க, இத்தாலிக்குப் போனா செமக் காமடியாயிருக்கும்னு நெனைக்கிறேன். காரணம் அவங்க பிரதமர்னு புரிஞ்சிக்கிட்டிருப்பீங்க. யப்பா, அநியாயத்துக்கு அவரு தொட்டதெல்லாம் (உயிருள்ளதோ/ஜடமோ) அவருக்கே சொந்தம்ங்கற ரேஞ்சுல ஒரே ஜாலிதான். நம்ம அம்மா விடுற அறிக்கைகளுக்கு டப் கொடுக்கக் கூடிய செமத் தெறமசாலி அவரு. அந்த பூகம்பம் வந்தப்போ, நாங்க ரோம்ல தான் இருந்தோம்(நான் அப்போ டான்ஸ் பிராக்டீஸ் பண்ணல, எனக்கும் அதுக்கும் தொடர்பில்ல). நான் கூட கட்டில் அந்த ஆட்டம் ஆடுன ஒடனே, ஆர்.சி.சக்தி பட காதல் காட்சிதான் கனவுல வந்திருச்சோன்னு நெனச்சிக்கிட்டிருந்தேன், பாத்தா பூகம்பம். அதுக்கு தல விட்ட அறிக்கை இருக்கே, சூப்பர். ஆனா, ஒரு வகைல அது உண்மையும் கூட. இங்கெல்லாம் நெறயப்பேர் கேம்பிங் போறேன் பேர்விழின்னு, விடுமுறைக் காலங்களில் இப்டித்தான் படாதபாடுப்படுத்திக்கிட்டும்,பட்டுகிட்டும் இருப்பாங்க.
4) ஒய்.ஜி.மகேந்திரன் இன்னும் இதே மாதிரி காமடியா தொகுத்து வழங்கறேன் பேர்விழின்னு மொக்கை போட்டுக்கிட்டிருந்தா, பேசாம தேசியப் பாதுகாப்புச் சட்டத்துல தூக்கி உள்ள போட்டிறனும், விட்டா நான் டாக்குடரு.வி.ஜி.சந்தோஷத்தோட ('பல்லாக்கு தூக்கினவன் பல் டாக்டர்னா, புல்லு புடிங்கினவன் புல் டாகா'ங்குற என் கவுஜைக்கே டப் கொடுக்கக் கூடிய தெறமசாலி)கவுஜைகளயே படிச்சிடுவேன் போலருக்கு.
5) குங்குமப்பூவும் கொஞ்சும்புராவும் படத்து ஹீரோதான, ஸ்னேஹாவுக்கு, வாய்ல சுளுக்கு வரவெச்ச, ஏப்ரல் மாதத்தில் அப்டின்ற படத்துல, கூழாங்கல்லை முழுங்கின ஸ்ரீகாந்துக்கு நண்பனா வந்து, எக்ஸ்பிரஷனக் காட்டி கொழந்தைங்கள பப்பு மம்மம் சாப்ட வெச்சவரு?(மத்த டீட்டெயில்சை உறுதிப்படுத்துற சூட்டிகையும், பொதுஅறிவும் இல்லாட்டியும் , அதுல நடிச்சவர்தானான்னு மட்டுமாச்சும் யாராவது சொல்லுங்க)
கல்லூரிச் சாலை - 2
அது இப்போ இருக்க மாதிரியே ஒரு கிரைசிஸ் டயம். ஒய்டுகே முடிஞ்சு, பாய்சன பாயாசமா நெனச்சு சப்டவங்கல்லாம் சர்வசாதாரணமா கதையல்ல நிஜமாகிட்டு இருந்தாங்க. நான் பிளஸ்டூ ஆரம்பிக்கும்போதே சனியன் சகடை கணக்கா எங்க டிபாட்மென்டை பாத்தவங்க நெறயப் பேர்(அது நீ இருந்ததாலன்னு சொல்றவங்களுக்கு இந்தப் பதிவை சமர்பிக்கிறேன்).
ரிசல்ட் வர்றதுக்கு முன்னயே நாங்களா முடிவு பண்ணி, பிரபு சம்பந்தி சேலத்துல வெச்சிருக்க காலேஜ்ல உத்தமமா சேர முடிவுப் பண்ணியாச்சு. அது ஏன் அந்த காலேஜுக்கு போனோம்னா, அந்த டைம்ல சேலம் சைட் காலேஜ்களில்தான் ஐந்து வருட எம்எஸ்சி கோர்ஸ் இருந்திச்சி (கல்யாண பத்திரிக்கைக்காக இல்லாட்டாலும், ஒரேடியா, சேந்திட்டா அஞ்சு வருஷம் பிரச்சினயில்லாமப் போகும்னு). ஆனா, ரிசல்ட் வந்தப்புறம் பாத்தா, தங்கபாலுவோட காலேஜ்லருந்து, வாரியார் சொந்தக்காரங்க கல்லூரி வரை, பொறியியல் கல்லூரிகள் பலது சீட் கொடுக்க போட்டி போடுற கலிகாலம். எங்க செட்லருந்து, பொறியியல் கல்லூரிகள் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் வரும்னு அறிவிப்பு வேற. திமுககாரங்களா இருந்திட்டு, எதுக்கு அண்ணாவை கேவலப்படுத்தனும்னு யோசனையில் இருந்தேன். ஆனா, அதுக்கு இடம்கொடுக்காதளவுக்கு இவங்க நக்கலும் ஓவரு, அந்த காலேஜுக்கே இசிஇ தரமாட்டேன்னு அடம்.
இவங்கல்லாம் திடீர் மானஸ்தனுங்கன்னு புரிஞ்சு, சரி ஒரு மாஸ்டர் டிகிரியாவது, டிகிரி காப்பி கணக்கா சுளுவா கெடைக்குதேன்னு சேலம் போகலாம்னு இருந்தப்போ, இங்க எங்க காலேஜ் பத்தி அக்கா நண்பர்கள் மூலமா தெரிய வந்துச்சி, அதே எம்எஸ்சி சென்னைப் பல்கலைக்கழகம் கீழ புதுசா வருதுன்னு.
கிண்டில போய் பீசெல்லாம் கட்டிட்டு, அட்மிஷன் சம்பந்தமா எதையோ வாங்க காத்திருந்தா, எங்கண்ணனோட நண்பர் வந்து எதிர்ல காட்சிக் கொடுக்குறார். அவருதான் ஆடிட்டிங் பாக்குறேன்னு சொன்னதால, எங்கப்பா, எப்டிப்பா காலேஜ் ஒகேவான்னா, 'என்ன சார் இங்கயா சேத்தீங்க, அந்த காலேஜ் ஊருக்குள்ள ஒன்றர கிலோமீட்டர் நடந்தால்ல கண்ல தட்டுப்படும், அதுவும் ஒரு பஸ்சும் அங்க நிக்காது, காலேஜும் ஆரம்பிச்சு, நாலு வருஷம்தான் ஆகுது, இப்டி பண்ணிட்டீங்களேன்னு' கபீர் கெளப்புறார்.
ஏற்கனவே பிரபு சம்பந்தி, பொண்ணு கல்யாணத்துக்கு பந்தி செலவுக்கு சேத்து வெக்கனும்னு எங்கக்கிட்டருந்து அம்பதாயிரம் மொய் வாங்கினதால, இங்கக் கெரகம் கரகம் ஆடட்டும்னு விட்டுட்டோம்.
இது நடந்தது, ஜூன் மாசம், அப்போதான், வீட்ல பொருளாதார நெருக்கடிகள் ஆரம்பமாகியிருந்தன. நாங்க கட்ட ஆரம்பித்திருந்த புதிய வீடு பற்றினக் கவலை. அதிமுக ஆட்சிக்கு வந்திருந்தது. அப்பா வினோதமாக விஜய் படங்களை பாக்க ஆரம்பிச்சார். எங்க கல்லூரிக்கு போயிட்டு வர சர்வசாதாரணமா, ஒரு நாளைக்கு அஞ்சு மணிநேரம் ஆகலாம், என்கிற திகில் தகவல். அக்காக்கு குழந்தை பிறந்தால் எப்டி வளக்கிறதுன்னு பயம். படிச்சு முடிச்சாலும் கணினித்துறையில் எதிர்காலமுண்டா என்று பயப்பட வைத்த காலக்கட்டம். எங்க ஏரியாவில் உச்சகட்ட தண்ணீர் பஞ்சம். என் மார்க் வெச்சு அப்பா சைட்ல எல்லா சொந்தக்காரங்களும் ஏகத்துக்கும் நக்கலடிச்சு வெறுப்பேத்துற வேலைய, சொந்த வேலய விட அதிகமாப் பாத்தாங்க. இப்டி ஒன்னு பத்தாகி, பத்தே பரமசிவமானக் ('தல'யோட பரமசிவம் பாத்தா கணக்கான்னு கூட வெச்சுக்கலாம்)காலக்கட்டம்.
ஒரு சனிக்கிழமை காலைல வீல்னு ஒரு சத்தம், அம்மாதான். என்னமோ ஏதோன்னு பதறி எழுந்தா, அப்பா டிவியப் பாருங்கறார். கலைஞர் கைது பத்தின செய்திகள்.
அன்னைக்கு சாயந்திரம் டிவியப் பாத்துகிட்டே எங்கம்மா சீரியஸா சொல்றாங்க, 'நீ என்னைக்கு அஞ்சு வருஷம் படிச்சு முடிக்கிறது, அதிமுக ஆட்சி போறது, வீட்டை கட்டி முடிக்கிறது, குழந்தைக்கு அஞ்சு வயசாகுறது, மத்த பிரச்சினைகள் சரியாகுறதுன்னு'. அந்த டைம்ல நான் இருந்த ஒரு மனநிலைக்கு வாழ்க்கையில் என்றுமே திரும்பக் கூடாதுன்னு இன்னிவரைக்கும் நெனைக்கிறதுண்டு.
ஆனால் எப்டி விக்கிரமன் படத்துல, ஒரு லாலாலாவுல எல்லாம் சரியாகிடுமோ, அதாட்டமே எல்லாம் பாசிடிவ்வா மாறுச்சின்னு இப்போ வரைக்கும் எனக்கு அதிசயமா இருக்கும்.
இதோட என் பேஜாரு ஒப்பாரி முடிஞ்சு, அடுத்த பாகத்திலிருந்து நிஜக் கல்லூரிக் காலம் தொடரும்.
!!!!!!!!!!!!!
மொக்கைச் செய்திகள்
ராகுல் காந்திக்கும், பத்து மாசத்திலருந்து ஒன்றரை வயசுவரையுள்ள குழந்தைகளின் நடைக்கும் ஒரு ஒத்துமை இருக்கு. என்னான்னு கண்டுப் பிடிச்சவங்க மனசோட வெச்சிக்கங்க:):):)
கேன்ஸ் பெஸ்டிவலுக்கு வந்ததிலிருந்து ரெண்டுநாள்வரை ஐஸ்வர்யா ராய்,அந்தக் கடுகடுன்னு இருந்தாங்க. என்னாக் கடுப்போ தெர்ல. இது வெறும் பிரென்ச் மீடியாகிட்டயா இல்லை அவங்க மூடே நல்லால்லையா யாருக்குத் தெரியும்? Franck Duboscங்கற நடிகர நல்லா வெளிப்படையாவே கலாய்ச்சாங்க. அதோட இவங்களுக்கு போய் டேன் மேக்கப் போடற அதிபுத்திசாலிங்கள என்னத்த சொல்ல.
டா வின்சி கோட் பார்த்து நொந்தவங்க, பயப்படாம போய் ஏஞ்சல்ஸ் அண்ட் டேமன்ஸ் பாருங்க. ஆனா கேள்வியெல்லாம் கேக்கக் கூடாது. எப்டி புஸ்தகத்த மதிமயங்கிப் போய் படிச்சோமோ அப்டியே பாக்கணும். அதே டமுக்கு டிப்பா டிப்பாதான்னாலும், ஜாலியா போகுது. புக்கைப் படிக்காதவங்களுக்குக் கதைச்சுருக்கம் என்னன்னா, தலையச் சுத்தி மூக்கை தொடுற கலையை விளக்கும் படம். கூடுதலா, ரோமுக்கு விசிட்டடிச்சவங்க டீமா போய், ஹேய் இது நாம அப்போ பார்த்தமே, என்னப்பா கூட்டம் இம்மாத்தூண்டு இருக்குங்கங்கற ரேஞ்சில பட்டயக் கெளப்பி, பக்கத்துல இருக்கவங்களை சதாய்க்கலாம்.
தமிழ்நாட்ல பன்னெண்டாம் கிளாஸ்ல ஸ்டேட் பர்ஸ்ட்லருந்து, பார்டர்ல பாசானவங்க வரைக்கும் எல்லாத்துக்கும் காரணம் நம்ம gaptain தான். பின்ன, அவரு எலெக்ஷனுக்கு குடும்ப சகிதமா ஊர் சுத்தலைன்னா, அவரு புள்ள ஸ்டேட் பர்ஸ்ட் வந்து, டெக்னிக்கலா தமிழ்நாட்லருக்க அத்தன ஸ்டூடன்சோட மார்க்கையும் பிரிச்சி, பெயிலாக்கி, அதகளமா சாதிச்சி, அல்லு கெளப்பிருப்பாப்ல. ஆனா பாருங்க, இந்த மைனாரிட்டி கருணாநிதி கவர்மென்ட் அடுத்த நாள் எலெக்ஷன் கவுண்டிங்க்ல கூட சரியா கவனம் செலுத்தாம, பன்னெண்டு தொகுதி, ஓட்டிங் மெஷினையும் கரெக்ட் பண்ணாம, ராவோட ராவா நம்ம ஜூனியர் gaptainஐ பெயிலாக்குற வேலைய செஞ்சி பழிவாங்கியிருக்குது. இதுக்கெல்லாம் ஒரு நாள் பிரேமலதா மேடம்க்கு ராஜாத்தி அம்மா, அவங்க பர்னிச்சர் கடைல வெச்சே பதில் சொல்ற காலம் வரும்னு எச்சரிக்கிறேன், ஆமா!